தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. சமீபத்திய நிலவரப்படி, கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபர்களின் எண்ணிக்கை 1. 50 லட்சத்தைக் கடந்துள்ளது.

சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகர்புற மாவட்டங்களில் கொரோனா தாக்கம் அதிகமாக உணரப்பட்டாலும், கொரோனா முதல் அலையை விட இரண்டாவது அலையில் தமிகழத்தின் கிராமப்புற மாவட்டங்கள் அதிகளவில்  பாதிப்படைந்துள்ளன.    

 

District Rural population
Kancheepuram 37
Perambalur 83
Salem 49
Cuddalore 66
Madurai 39
Vellore 57
Thanjavur 65
Nagapattinam 77
Chennai N/A
Tiruvannamalai 80
Tiruchirappalli 51
Dindigul 63
Karur 59
Pudukkottai 80
Vilupuram 85
Dharmapuri 83
Sivagangai 69
Thiruvarur 80
Namakkal 60
Ramanathapuram 70
Krishnagiri 77
Coimbatore 24
Erode 49
Coimbatore 24
Kanniyakumari 18
Tiruppur 39
Virudhunagar 50
Tirunelveli 51
Thoothukkudi 50
Theni 46
Ariyalur 89
The Nilgiris 41

 

அரியலூர், ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, சிவகங்கை, திருவாரூர், சிவகங்கை, தர்மபுரி, விழுப்புரம், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், கடலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 60 சதவிகிதத்துக்கும் அதிகமான மக்கள் கிராமப்புறங்களில் வாழ்ந்து வருகின்றன. எனவே, இவைகள் கிராமப்புற மாவட்டங்களாக கருதப்படுகிறது.                  

கொரோனா இரண்டாவது அலையில், இந்த கிராமப்புற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விகிதம் அதிகரித்து காணப்படுகிறது.        

உதாரணமாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் 2021 மார்ச் 1ம் தேதி முதல் மே 10ம் வரை 3158 கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டன. கொரோனா முதல் அலையின் போது ( 2020 மார்ச் முதல் 2021 மார்ச் 1ம் தேதி வரை) கண்டறியப்பட்ட மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 6475 என்றளவில் இருந்தது. அதாவது, தற்போது சராசரியாக ஒரு மாதத்தில் மட்டும் 1300க்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் பதிவு செய்யப்படுகின்றன. முதல்  அலையின்  போது இந்த எண்ணிக்கை 540 ஆக குறைந்து இருந்தது. 

இரண்டாவது அலையில், சென்னையில் (63396) ஒரு மாத கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்பட்டாலும், பாதிப்பு விகிதம் கிராமப்புற மாவட்டங்களில் அதிகமாக உள்ளது.          

District 1st wave (2020 March 1 0 2021 March 1 ) 2nd wave (2021 March 1 - May 10) Infection per Month in First wave Infection per month in Second Wave
Kancheepuram 29551 13888 2463 5952
Perambalur 2284 909 190 390
Salem 32755 13510 2730 5790
Cuddalore 25173 8013 2098 3434
Madurai 21249 15303 1771 6558
Vellore 20995 9915 1750 4249
Thanjavur 18126 10624 1511 4553
Nagapattinam 8609 7340 717 3146
Chennai 235721 147923 19643 63396
Tiruvannamalai 19499 5715 1625 2449
Tiruchirappalli 14984 13589 1249 5824
Dindigul 11492 6339 958 2717
Karur 5506 3997 459 1713
Pudukkottai 11657 2279 971 977
Vilupuram 15268 6270 1272 2687
Dharmapuri 6656 4590 555 1967
Sivagangai 6791 2546 566 1091
Thiruvarur 11358 5737 947 2459
Namakkal 11810 6781 984 2906
Ramanathapuram 6475 3158 540 1353
Krishnagiri 8169 9694 681 4155
Coimbatore 55799 36780 4650 15763
Erode 14802 11214 1234 4806
Coimbatore 55799 39300 4650 16843
Kanniyakumari 17089 8523 1424 3653
Tiruppur 18361 12816 1530 5493
Virudhunagar 16667 5802 1389 2487
Tirunelveli 15737 14810 1311 6347
Thoothukkudi 16359 13590 1363 5824
Theni 17162 6530 1430 2799
Ariyalur 4741 1575 395 675
The Nilgiris 8359 2574 697 1103
         
  765003 451634 63750 193557

 

அதேபோன்ற, தமிழகத்தில் சென்னை, நீலகிரி ஆகிய மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் மிகவும் சொற்ப அளவில் தான் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ்கள் போடப்பட்டுள்ளன.       

 

District 2 Dose administered (%)
Kancheepuram 1
Perambalur 1
Salem 2
Cuddalore 1
Madurai 2
Vellore 3
Thanjavur 1
Nagapattinam 2
Chennai 9
Tiruvannamalai 1
Tiruchirappalli 2
Dindigul 2
Karur 1
Pudukkottai 1
Vilupuram 1
Dharmapuri 1
Sivagangai 1
Thiruvarur 1
Namakkal 2
Ramanathapuram 1
Krishnagiri 2
Coimbatore 2
Erode 2
Coimbatore 2
Kanniyakumari 2
Tiruppur 1
Virudhunagar 2
Tirunelveli 1
Thoothukkudi 1
Theni 1
Ariyalur 1
The Nilgiris 5

சென்னையில், அதிகபட்சமாக 9 சதவிகித மக்களுக்கு கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது. தூத்துக்குடி, சிவகங்கை , தர்மபுரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 1 சதவிகித பேர் மட்டுமே தடுப்பூசியின் இரண்டாவது டோஸ்களை பெற்றுள்ளனர். 

இறப்பு எண்ணிக்கை: 

கடந்த 2021 மார்ச் 1ம் தேதி முதல் மே 10ம் தேதி வரை குறைந்தது 2584  பேர் கொரோனா நோய்த் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். கொரோனா இறப்புகளைப் பொறுத்தவரியில் கிராமப்புற மாவட்டங்களை விட நகர்ப்புற மாவட்டங்களில் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. 

சென்னையில் 1,054 பேரும், மதுரையில் 133 பேரும், காஞ்சிபுரத்தில் 183 பேரும், சேலத்தில் 131 பேரும் கடந்த 70 நாட்களில் மரணமடைந்துள்ளார். கொரோனா இரண்டாவது அலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் இறப்பு விகிதம் அதிகப்படியாக உள்ளது. 

இருப்பினும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது.  மொத்த மக்கள் தொகையில் 18,474 பேருக்கு (அதாவது, 0.89% ) மட்டுமே கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ்  நிர்வகிக்கப்பட்டுள்ளது.     

 

District Total COvid-19 Death First Wave Second Wave 1st Wave CFR% 2nd Wave CFR%
Kancheepuram 631 448 183 1.516023146 1.317684332
Perambalur 30 21 9 0.9194395797 0.9900990099
Salem 598 467 131 1.425736529 0.9696521095
Cuddalore 360 288 72 1.144082946 0.8985398727
Madurai 593 460 133 2.164807756 0.8691106319
Vellore 437 351 86 1.671826625 0.8673726677
Thanjavur 339 256 83 1.412335871 0.78125
Nagapattinam 190 133 57 1.544894877 0.7765667575
Chennai 5209 4155 1054 1.762677063 0.7125328718
Tiruvannamalai 322 284 38 1.456484948 0.6649168854
Tiruchirappalli 268 183 85 1.221302723 0.6255059239
Dindigul 235 200 35 1.740341107 0.5521375611
Karur 71 51 20 0.9262622594 0.5003752815
Pudukkottai 168 157 11 1.346830231 0.4826678368
Vilupuram 141 113 28 0.74 0.43
Dharmapuri 74 55 19 0.8263221154 0.4139433551
Sivagangai 136 126 10 1.855396849 0.3927729772
Thiruvarur 133 111 22 0.9772847332 0.3834756842
Namakkal 136 111 25 0.9398814564 0.3686771863
Ramanathapuram 147 137 10 2.115830116 0.3166561115
Krishnagiri 147 118 29 1.444485249 0.2991541159
Coimbatore 759 683 76 1.224036273 0.2066340402
Erode 173 150 23 1.013376571 0.2051007669
Coimbatore 759 683 76 1.224036273 0.1933842239
Kanniyakumari 358 261 97 1.527298262 1.138096914
Tiruppur 253 224 29 1.219977125 0.2262796504
Virudhunagar 260 232 28 1.391972161 0.4825922096
Tirunelveli 269 214 55 1.359852577 0.3713706955
Thoothukkudi 167 143 24 0.8741365609 0.1766004415
Theni 233 207 26 1.206153129 0.3981623277
Ariyalur 54 49 5 1.033537228 0.3174603175
The Nilgiris 53 48 5 0.5742313674 0.1942501943