நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு கடுமையாக அதிகரித்துவருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. இன்று ஒரு நாள் மட்டும் தமிழகத்தில் கொரோனாவால் 33 ஆயிரத்து 75 நபர்களுக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16 லட்சத்து 31 ஆயிரத்து 291 நபர்களாக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரேநாளில் 6 ஆயிரத்து 150 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்து 44 ஆயிரத்து 371 நபர்களாக உயர்ந்துள்ளது.




இன்று ஒரே நாளில் 20 ஆயிரத்து 486 நபர்கள் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர். இதனால், மாநிலம் முழுவதும் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்தோர் எண்ணிக்கை 13 லட்சத்து 81 ஆயிரத்து 690 ஆக அதிகரித்துள்ளது. சென்னையைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் காரணமாக 26 ஆயிரத்து 925 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் மட்டும் 9 லட்சத்து 75 ஆயிரத்து 262 நபர்கள் ஆவர். பெண்கள் 6 லட்சத்து 55 ஆயிரத்து 991 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் 38 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உள்பட மொத்தமாக சிகிச்சையில் இருப்பவர்கள் 48 ஆயிரத்து 156 ஆகும். இன்று மட்டும் தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 18 ஆயிரத்து 719 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்கள் 14 ஆயிரத்து 356 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில்  மட்டும் கொரோனா தொற்று காரணமாக 335 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 152 பேர் தனியார் மருத்துவமனையிலும், 183 பேர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றவர்கள். இதனால், மொத்த உயிரிழப்பு மாநிலம் முழுவதும் 18 ஆயிரத்து 5-ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 5 ஆயிரத்து 851 நபர்கள் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளனர்.




இன்று உயிரிழந்தவர்களில் 257 நபர்கள் நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள். எந்தவித பாதிப்பும் இல்லாமல் 78 நபர்கள் உயிரிழந்துள்ளனர். மாநிலம் முழுவதும் 2 ஆயிரத்து 492 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் கொண்ட படுக்கைகளும், 9 ஆயிரத்து 19 ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளும், 459 ஐ.சி.யு. படுக்கைகளும் தயாராகவுள்ளது. நாடு முழுவதும் தினசரி பாதிப்பு 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவாகிவரும் நிலையில், ஒரு மாதத்திற்கு பிறகு இன்று 3 லட்சத்திற்கும் குறைவாக தினசரி பாதிப்பு பதிவாகியது என்பது குறிப்பிடத்தக்கது.