Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதிப்பு நிலவரம் என்ன?

தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 19 Jun 2021 07:53 PM
தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதிப்பு நிலவரம் என்ன?

தமிழ்நாட்டில் இன்று 8 ஆயிரத்து 183 நபர்கள் கொரோனாவால் புதியதாக பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இன்று மட்டும் கொரோனா தொற்று காரணமாக 180 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த 18 ஆயிரத்து 232 நபர்கள் இன்று குணம் அடைந்து வீடு திரும்பினர். தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆயிரத்து 015 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லியில் இன்று 135 பேருக்கு கொரோனா

நாட்டின் தலைநகரான டெல்லியில் கொரோனா தொற்று கடந்த சில வாரங்களாக கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதியதாக 135 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் டெல்லியில் கொரோனாவால் 7 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் இன்றைய நிலவரப்படி கொரோனா பாதிப்பிற்கு 2 ஆயிரத்து 372 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தெலுங்கானாவில் முடிவுக்கு வருகிறது ஊரடங்கு

தெலுங்கானாவில் கொரோனா பரவல் காரணமாக, வரும் 20-ந் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், அந்த மாநில அமைச்சரவை இன்று நடத்திய ஆலோசனை கூட்டத்தில் அந்த மாநிலத்தில் ஊரடங்கு நாளையுடன் முடிவுக்கு வரும் என்று முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, நாளை முதல் தெலுங்கானாவில் பொதுமுடக்க கட்டுப்பாடுகளை முழுமையாக தளர்த்திக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 2,832 நபர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு

அமைச்சர் மா.சுப்பிரமிணயன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, தமிழக மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வமாக உள்ளதால் தடுப்பூசியை கட்டாயமாக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. மாநிலத்தில் கருப்பு பூஞ்சையால் இதுவரை 2 ஆயிரத்து 382 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 111 வரை குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்படுபவர்கள் முதல்வரின் காப்பீடு திட்டத்தில் சிகிச்சை வழங்குவது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும். சென்னை மாநகராட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கொரோனா மூன்றாவது அலை 6 - 8 வாரங்களுக்குள் தாக்கக்கூடும் - எய்ம்ஸ் தலைவர் எச்சரிக்கை

எய்ம்ஸ் தலைவர் ரன்தீப் குலேரியா அளித்த பேட்டியில், இரண்டாவது அலையில் இருந்து மக்கள் எந்த பாடங்களையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை. இநத நிலையில், தவிரக்க முடியாத மூன்றாவது அலை நாடு முழுவதும் அடுத்த ஆறு முதல் எட்டு வாரங்களுக்குள் தாக்கக்கூடும். இரண்டாவது அலையில் பாதிக்கப்படாதவர்கள் மூன்றாவது அலையில் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றார்.

குழந்தைகளுக்கான சிகிச்சை முறைகள் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள்




கொரோனா பெருந்தொற்று மேலாண்மையின் ஒரு பகுதியாக  குழந்தைகளுக்கான சிகிச்சை முறைகள் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.  

இறந்தவர்களின் ஓய்வூதியங்களை விரைந்து வழங்க வேண்டும் - மத்திய அரசு அறிவுறுத்தல்

கொரோனா பெருந்தொற்று காலங்களில் இறந்தவர்களின் ஓய்வூதியங்களை விரைந்து வழங்குமாறு  மத்திய அரசு வங்கிகளுக்கு  அறிவுறுத்தியுள்ளது.  


இதுதொடர்பாக வெளியிட்ட செய்திக்குறிப்பில், " ஓய்வூதியதாரர் இறக்கும் பட்சத்தில் அவரது வாழ்க்கை துணை அல்லது குடும்ப உறுப்பினரிடம் தேவையில்லாத விவரங்கள் அல்லது ஆவணங்கள் கேட்டு எந்த வித சிரமத்திற்கும் ஆளாக்காமல் ஓய்வூதியத்தை விரைந்து வழங்குமாறு வங்கிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.


இறந்துப்போன ஓய்வூதியதாரருக்கு அவரது வாழ்க்கை துணையுடன் கூட்டு கணக்கு இருக்கும் பட்சத்தில், கடிதம் அல்லது விண்ணப்பமே குடும்ப ஓய்வுதியம் வழங்குவதற்கு போதுமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஒருவேளை உயிர் நீத்த ஓய்வூதியதாரர் உடன் அவரது வாழ்க்கைத் துணைக்கு கூட்டு கணக்கு இல்லாத பட்சத்தில், படிவம் 14-ல் இரண்டு சாட்சிகளுடன் கூடிய விண்ணப்பம் குடும்ப ஓய்வூதியம் வழங்க போதுமானது" என்று தெரிவிக்கப்பட்டது.  

nilgiris District Covid-19 data Tracker: ஜூன் மாதத்தில் நல்ல முன்னேற்றம்

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று வளர்ச்சி விகிதமும், கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிகையும் மே மாதத்துக்குப் பிறகு குறையத் தொடங்கியுள்ளது.

 

இன்று மாலை முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் எனத் தகவல்

ஜூன் 21ம் தேதிக்குப் பிந்தைய ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் தளர்வுகள் குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என கூறப்படுகிறது .

நாமக்கல் மாவட்டத்தில் இன்று கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படும் விவரங்கள்

ஆம்போடெரிசின் பி மருந்தின் உள்நாட்டு உற்பத்தியை 5 மடங்கு இந்தியா அதிகரித்துள்ளது.

மியூகோமைகோசிஸ் சிகிச்சைக்கு லிபோசோமல் ஆம்போடெரிசின் பி மருந்தின் இருப்பு போதிய அளவுக்குமேல் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது. 


இதுகுறித்து வெளியட்ட செய்திக் குறிப்பில், " நாட்டில் 27,142 மியூகோமைகோசிஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். எதிர்காலத்தில், கருப்பு பூஞ்சை பாதிப்பு அதிகரித்தால், ஆம்போடெரிசின் பி மருந்தை போதிய அளவுக்கு மேல் இருப்பு வைக்க இந்தியா தயாராக உள்ளது. இதன் உள்நாட்டு உற்பத்தியை 5 மடங்குக்கு மேல் இந்தியா அதிகரித்துள்ளது.


லிபோசோமல் ஆம்போடெரிசின் பி மருந்தின் உள்நாட்டு உற்பத்தி கடந்த ஏப்ரல் மாதம் 62,000 குப்பிகளாக இருந்தன. இந்த ஜூன் மாதத்தில் இதன் உற்பத்தி 3.75 லட்சம் குப்பிகளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்ததோடு, 9,05,000 லிபோசோமல் ஆம்போடெரிசின் பி குப்பிகளை இறக்குமதி செய்யவும் இந்தியா ஆர்டர் கொடுத்துள்ளது. 


கடந்த மே 11ம் தேதி முதல், ஜூன் 17ம் தேதி வரை, 7,28,045 லிபோசோமல் ஆம்போடெரிசின் பி குப்பிகள் அனைத்து மாநிலங்கள் மற்றும் மத்திய மருத்துவமனைகளுக்கு மருந்துகள் துறை ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகத்துக்கு 25,260 குப்பிகளும், புதுச்சேரிக்கு  460 குப்பிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது.  

தொற்று தினசரி வளர்ச்சி விகிதம்   (-) மைனஸ் ஆக உள்ளது

தமிழ்நாடு, கர்நாடகாக, மகாராஷ்டிரா உள்ளிட்ட அநேக மாநிலங்களில் கொரோனா தொற்று தினசரி வளர்ச்சி விகிதம்   (-) மைனஸ் ஆக உள்ளது. தேசிய அளவில் தொற்று வளர்ச்சி (-) 5.05 வளர்ச்சியாக உள்ளது. 


     

ஆக்சிஜனை நிறுத்தி சோதனை: விசராணை ஆணையம் அறிக்கை தாக்கல்

உத்தரபிரதேசத்தில் நோயாளிகளுக்கு ஆக்சிஜனை நிறுத்தி சோதனை செய்த மருத்துவமனை குற்ற செயல்களில் ஈடுபடவில்லை என  விசாரணை ஆணையம் தெரிவித்தது.  நோயாளிகள் உயிரிழப்புகளுக்கும், ஆக்சிஜன் நிறுத்த பரிசோதனைக்கும் எந்த தொடர்புமுமில்லை என தனது அறிக்கையில் தெரிவித்தது.    


முன்னதாக, கடந்த மாதம் 26ம் தேதியன்று, ஆக்ராவில் உள்ள ஸ்ரீ பராஸ் மருத்துவமனை உரிமையாளர் அரிஞ்சய் ஜெயின் , அங்கு சிகிச்சை பெற்றுவந்த கொரோனா நோயாளிகள் 22 பேருக்கு செலுத்தப்பட்ட ஆக்சிஜனை நிறுத்தினால் என்ன ஆகும் என்பதை அறிய, ஆக்சிஜன் சுவிச்சை நிறுத்தியதாக செய்திகள் வெளியாகின.


  ”இரவு முழுவதும் சித்ரவதையாக இருக்கிறது” : ஆக்சிஜனைப் பிடுங்கிவிட்ட விஷயத்தில் முக்கிய ஆதாரம்!

குழந்தைகளுக்கு கொரோனா தொற்று - ஜிப்மர் மருத்துவமனை முக்கிய அறிவிப்பு

குழந்தைகளுக்கு கொரோனா தொற்று  ஏற்படாமல் இருக்க  ஜிப்மர் மருத்துவமனை சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. 



  



11 மாவட்டங்களிலும் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படுமா?

தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு நிறைவடைய இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், ஊரடங்கை நீட்டிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து இன்று காலை 11 மணியளவில் மருத்துவ நிபுணர்கள், சுகாதாரத் துறை மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையின்போது பொதுப்போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 11 மாவட்டங்களிலும் கூடுதல் தளர்வுகள் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. 


 

Background

மாநிலம் முழுவதும், கடந்த 24 மணி நேரத்தில் 8,633 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக, கோவையில் 1,089 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்றைய, கொரோனா இறப்பு எண்ணிக்கை 287 ஆக  அதிகைர்த்தது. 19,860 நபர்கள் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.    


மாநிலத்தில் கொரோனா பெருந்தொற்று முற்றிலும் குறைந்த பின்னரே கோவில்கள் பொதுமக்கள் தரிசனத்துக்கு திறக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.