Tamil Nadu Coronavirus LIVE :ஆந்திராவில் ஒரே நாளில் 11.85 லட்சம் பேருக்கு தடுப்பூசி

தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 20 Jun 2021 09:38 PM
ஆந்திராவில் ஒரே நாளில் 11.85 லட்சம் பேருக்கு தடுப்பூசி

ஆந்திராவில் கொரோனா பரவலில் இருந்து பொதுமக்களை காப்பாற்றுவதற்காக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஆந்திராவில் இன்று மட்டும் அதிகபட்சமாக 11.85 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, ஒரே நாளில் 6 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் 8,000-க்கு கீழ் குறைந்தது கொரோனா தொற்று எண்ணிக்கை..

தமிழ்நாட்டில் 8,000-க்கு கீழ் குறைந்தது கொரோனா தொற்று எண்ணிக்கை..

புதுச்சேரியில் இன்று கொரோனா வைரசுக்கு 3 பேர் பலி

புதுச்சேரியில் இன்றைய நிலவரப்படி 251 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 14 ஆயிரத்து 847 ஆக அதிகரித்துள்ளது. இதில் 3 ஆயிரத்து 562 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுச்சேரியில் இன்று மட்டும் 3 நபரகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.  இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,723 ஆக உயர்ந்துள்ளது.

குழந்தைகள் கொரோனா பராமரிப்பு மையத்தில் முதல்வர் நேரில் ஆய்வு

கொரோனா மூன்றாவது அலையில் இருந்து குழந்தைகளை காப்பாற்றுவதற்காக சென்னை, எழும்பூரில் குழந்தைகள் கொரோனா பராமரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த பரிசோதனை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அங்கு அமைக்கப்பட்டுள்ள படுக்கை வசதிகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியன குறித்தும் சுகாதாரத்துறையினரிடம் கேட்டறிந்தார்.  

கொரோனாவால் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் வழங்குவது சாத்தியமற்றது - மத்திய அரசு

உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், கொரோனாவால் உயிரிழந்த ஒவ்வொரு நபர்களின் குடும்பங்களுக்கும் தலா ரூபாய் 4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமானால் மாநில பேரிடர் மீட்பு நிதி முழுவதையும் பயன்படுத்த வேண்டியதாகிவிடும். மொத்த செலவினமும் அதிகரிக்க கூடும் என்பதால் அது சாத்தியமற்றது என்று தெரிவித்துள்ளது.

2-ல் உள்ள 23 மாவட்டங்களில் என்னென்ன கூடுதல் தளர்வுகள்?

2-ல் உள்ள 23 மாவட்டங்களில், ஏற்கனவே சில செயல்பாடுகளுக்கான நேரத் தளர்வுகளும், கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.


மேலும்,


அனுமதிக்கப்பட்டுள்ள


• தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை அனுமதிக்கப்படும். 7.00 மணி வரை செயல்பட


•உணவகங்கள் மற்றும் அடுமணைகளில் (hotels, restaurants and bakeries) பார்சல் சேவை மட்டும் காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை அனுமதிக்கப்படும். மின் வணிகம் (e-commerce) மூலம் உணவு விநியோகம் செய்யும் அனைத்து மின் வணிக நிறுவனங்கள் அனுமதிக்கப்படும். மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட


மின் வணிக அனைத்தும் காலை இயங்கலாம். சேவை 06.00 நிறுவனங்கள் (E மணி முதல் இரவு 09.00 ce) வரை


இனிப்பு மற்றும் காரவகை விற்பனை செய்யும் கடைகள் காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

வகை 1 - (11 மாவட்டங்கள்) : தளர்வுகள் இருக்கிறதா?

வகை 1 -(11 மாவட்டங்கள்)


கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர் திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் வகை 2 - (23 மாவட்டங்கள்)


கடலூர்,


அரியலூர், கன்னியாகுமரி, இராமநாதபுரம் திருநெல்வேலி. கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, தென்காசி, பெரம்பலூர், தேனி, இராணிப்பேட்டை, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்கள். சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம்,


கிருஷ்ணகிரி,


திருப்பத்தூர்,


தூத்துக்குடி,


வகை 3 - (4 மாவட்டங்கள்)


செங்கல்பட்டு மாவட்டங்கள்


மேற்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ள மாவட்டங்களுள், வகை 1-ல் உள்ள 11 மாவட்டங்களுக்கு ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் மட்டும் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.

ஊரடங்கு 28-ஆம் தேதி வரை நீட்டிப்பு..!

ஊரடங்கு 28-ஆம் தேதி வரை நீட்டிப்பு..!  மாவட்டங்கள் 3 வகைகளாக பிரித்து தளர்வுகள் அறிவிப்பு

தமிழ்நாடு முழுவதும் தளர்வுகளுன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட இருக்கிறது

தமிழ்நாடு முழுவதும் தளர்வுகளுன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட இருக்கிறது.இது,  குறித்த அறிவிப்பு சற்று நேரத்தில் வெளியாக உள்ளதாக தகவல்.

India Covid-19 Data Tracker: இந்தியாவின் கொரோனா இறப்பு எண்ணிக்கை நிலவரம் என்ன?

கடந்த 7 நாட்களில் 16,333 பேர் கொரோனா நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். அதாவது, சராசரியாக 2300 பேர் கொரோனா தொற்றால் இறந்து வருகின்றனர். கடந்த மே 23ம் தேதி இந்தியாவின் வருடாந்திர இறப்பு எண்ணிக்கை 29,330 ஆக இருந்தது. தினசரி சராசரி இறப்பு எண்ணிக்கை 4,000க்கும் அதிகம். 


உலகளவில், 40 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதில் 50 விழுக்காடு கொரோனா இறப்புகள் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், ரஷியா ஆகிய ஐந்து நாடுகளில் ஏற்பட்டுள்ளது. 


ஒரு வார காலத்தில் அதிகமான உயிர்களை பறிகொடுத்த நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.     


தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 28ஆம் தேதி நீட்டிக்கப்பட வாய்ப்பு
தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 28ஆம் தேதி நீட்டிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த முறையாக அறிவிப்புகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும். தொற்று குறைந்த 30 மாவடங்களில் கூடுதல் தளர்வுகள் 50% பயணிகளுடன் பேருந்து போக்குவரத்து சேவைக்கு அனுமதி வழங்கப்படலாம்.   

அடுத்த ஆறு முதல் எட்டு வாரங்களில் 3வது அலை நாட்டைத் தாக்க கூடும் - டாக்டர் ரண்தீப் குலேரியா

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது, அடுத்த ஆறு முதல் எட்டு வாரங்களில் நாட்டைத் தாக்க கூடும் என  அகில இந்திய மருத்துவ அறிவியல் (எய்ம்ஸ்) இயக்குனர் டாக்டர் ரண்தீப் குலேரியா தெரிவித்தார். 


கொரோனா வைரஸ் உருமாற்றமடையும் போது, அதிக பாதிப்பு ஏற்படுத்தும் வகைகள் உருவாகின்றன என்றும் தொற்று குறைந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் போது, கொரோனா வழிகாட்டு நடத்தைமுறைகளை மக்கள் பின்பற்றாமல் போவதால் புதிய அலை உண்டாகிறது என்றும் கூறினார்.

Background

தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 8,183 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டது. 18,232 பேர் கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது, கொரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 89,009 ஆக குறைந்துள்ளது. கடந்த, 24  மணி நேரத்தில் 180 கொரோனா உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.