Tamil Nadu Coronavirus LIVE News :தமிழ்நாட்டில் 16 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு

தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 11 Jun 2021 08:16 PM
தமிழ்நாட்டில் 16 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த சில தினங்களாக ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குறைந்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 ஆயிரத்து 759 ஆக பதிவாகி உள்ளது. இன்று மட்டும் கொரோனா தொற்றில் இருந்து 29 ஆயிரத்து 243 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 378 நபர்கள் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி கொரோனா தொற்று காரணமாக 1 லட்சத்து 74 ஆயிரத்து 802 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்திற்கு வந்தது 3.65 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள்

தமிழ்நாட்டில் கொரோனா பரவலில் இருந்து அனைவரும் தங்களை தற்காத்துக் கொள்வதற்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசு சார்பில் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் தற்போது தடுப்பூசிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கடந்த சில தினங்களாக கூறி வருகிறார். இந்த நிலையில், மகாராஷ்ட்ராவில் இருந்து 3.65 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு இன்று வந்தது.

மானாமதுரையில் ஊரடங்கு விதிகளை மீறி பள்ளிவாசலில் தொழுகை

இஸ்லாமியர்கள் தொழுகை செய்வதை தங்களது மதக்கடமைகளில் ஒன்றாக கொண்டுள்ளனர். தற்போது கொரோனா பரவலை தடுக்கும் நோக்கத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், வழிபாட்டுத் தலங்களில் வழிபடுவதற்கு அனைத்து மதத்தினருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பள்ளிவாசலில் இன்று ஏராளமான இஸ்லாமியர்கள் ஒன்றாக கூடி தொழுகை நடத்திக் கொண்டிருந்தனர். இதையடுத்து, தகவலறிந்த வட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு விரைந்து, தொழுகையில் ஈடுபட்டவர்களுக்கு அறிவுரை கூறி வெளியேற்றினார்.  

புதுச்சேரியில் கட்டுக்குள் வரும் கொரோனா

நாடு முழுவதும் கொரோனா பரவலின் இரண்டாம் அலை கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளது. புதுச்சேரியில் கடந்த 24 மணிநேரத்தில் புதியதாக 429 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 11 ஆயிரத்து 684 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழப்பு ஆயிரத்து 668 ஆக உயர்ந்துள்ளது.  

நடிகர் பாலசரவணனின் தந்தை கொரோனாவால் உயிரிழப்பு

தமிழ்த்திரையுலகின் வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகர் பாலசரவணன். குட்டிப்புலி, வேதாளம், அதே கண்கள், ஈஸ்வரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர். இவருடைய தந்தை எஸ்.ஏ.ரெங்கநாதன். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்ப இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கோவாச்கின் தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி வழங்க அமெரிக்கா மறுப்பு

இந்தியாவில் பயன்படுத்தப்படும் கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசர காலத்துக்கு கட்டுப்பாடுகளுடன் பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (​The Food and Drug Administration) அனுமதி மறுத்துள்ளது. 


இந்தாண்டு, ஜனவரி மாத தொடக்கத்தில் இந்தியாவில் கோவக்சின் தடுபூசிக்கு அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதியை  மத்திய மருந்துகள் தரகட்டுப்பாட்டு ஆணையர் வழங்கினார்.         


பாரத் பயோக் டெக் நிறுவனம், கோவாக்சின் என்ற தடுப்பூசியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ஐசிஎம்ஆர்) மற்றும் புனேவில் உள்ள தேசிய வைராலாஜி மையத்துடன் இணைந்து உருவாக்கியது. இதன், 3ம் கட்ட பரிசோதனை, இந்தியாவில் 25,800 தன்னார்வலர்களிடம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அதன் விவரங்கள் அனைத்தும் இதுநாள்  வரை பொதுவெளியில் வெளியிடப்படவில்லை. 


முன்னதாக,அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் போன்ற பல்வேறு வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டு, அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள தடுப்பூசிகளுக்கு இந்தியாவில் பயன்படுத்த அனுமதி வழங்க இந்திய அரசு ஒப்புதல் வழங்கியது.

ஒன்றிய அரசே 100% கொள்முதல் செய்ய வேண்டும் - தமிழ்நாடு நிதி அமைச்சர்

தடுப்பூசி கொள்முதலில் 75% ஒன்றிய அரசு மேற்கொள்ளுமென கொள்கையை மாற்றிய போதும் 25% தனியார் மருத்துவமனைக்கு அனுமதிப்பது நடைமுறை சாத்தியமற்றது.ஒன்றிய அரசே 100% கொள்முதல் செய்து,விநியோகத்தில் மாநிலம் முழு சுயாட்சி பெறுவதே சிறந்தது என தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் தெரிவித்தார்.   

Coimbatore Covid-19 Vaccination: கோயம்பத்தூர் மாவட்டம் தடுப்பூசி நிலவரம்


தனியார் மருத்துவமனை கோவின் இணைகதளத்திலிருந்து தற்காலிகமாக நிக்கப்பட்டுள்ளது

திருப்பூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஒதுக்கப்பட்ட தடுப்பூசியை தனியார் நிறுவனத்துக்கு வழங்கிய விவாகரம். துறைரீதியான நடவடிக்கை மேற்கொண்டார் திருப்பூர் துணை இயக்குனர்.    


இதுகுறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில், "திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஒதுக்கப்பட்ட கோவிட் தடுப்பூசி மருந்தை தனியார் செவிலியர்கள் மூலமாக தனியார் ஆடை நிறுவன ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்டதாக பத்திரிக்கைகளில் செய்தி வந்ததை தொடர்ந்து, தவறுதலாக தடுப்பூசி வழங்கிய மருந்தாளுநர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை தொடரப்பட்டுள்ளது. 


மேலும், கண்காணிக்க வேண் நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலரிடம் விளக்கம் கேட்டகப்பட்டுள்ளது.  சமந்தப்பட்ட தனியார் மருத்துவமனையை கோவின் இணைகதளத்திலிருந்து (Co-WIN portat) தற்காலிகமாக நிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   

இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்று நிலவரம்:

இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்று நிலவரம்:


குணமடைந்தோர் எண்ணிக்கை  -94.93% 
 சிகிச்சை பெற்றுவருபோர் எண்ணிக்கை    -3.83% 
உயிரிழந்தோர் எண்ணிக்கை  -1.24%


தமிழ்நாட்டுக்கு 3.65 லட்சம் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள்

இன்று மாலைக்குள் 3.65 லட்சம் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் வரஉள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.      

குஜராத்தில் பூங்காக்கள் மற்றும் நூலகங்கள் மீண்டும் செயல் பட அனுமதி

குஜராத் மாநிலத்தில் நோய் தொற்று பரவல் குறைந்து வருவதையடுத்து அம்மாநில அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது.
அதன்படி உணவகங்கள், தங்கும் விடுதிகள், உடற்பயிற்சி கூடங்கள், மதவழிபாட்டு தலங்கள் ஆகியவை சில கட்டுப்பாடுகளுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.



உணவகங்கள் காலை ஒன்பது மணி முதல் மாலை ஏழு மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டள்ளது. 50 சதவீதம் பேர் மட்டுமே அமர்ந்து சாப்பிட அனுமதிக்கப்படுவார்கள். பூங்காக்கள் மற்றும் நூலகங்கள் காலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை செயல்படவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மேலும் 1 வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
நேற்றுடன் முடிவடைவதாக இருந்த ஊரடங்கு வரும் 17-ஆம் தேதி வரை தொடரும் என்று அம்மாநில அரசு தெரிவித்தது.


இந்த ஊரடங்கின்போது சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களுடன் மாலை நான்கு மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்திற்குள் பயணிப்பதற்கு தனியார் வாகனங்கள் இ-பாஸ் பெற்றுக் கொள்ள வேண்டுமென்றும் தொpவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் குணமடைவோர் எண்ணிக்கையில் கோயம்பத்தூர் மாவட்டம் முதலிடம்

நாடுமுழுவதும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களில் கோயம்பத்தூர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. 

























கோயம்பத்தூர்5057     
பெங்களூர்2,191
எர்ணாகுளம்1596
கிழக்கு கோதாவரி1,416
வடக்கு 24 பர்கனா மாவட்டம் (மேற்கு வங்கம்) - 966
நாடுமுழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சரிய தொடங்கியது

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 91,702 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. நேற்று முன்தினம் 92 ஆயிரம், நேற்று 97 ஆயிரமாக இருந்த பாதிப்பு இன்று 91 ஆயிரமாக ஆக குறைந்துள்ளது. 


 

கொரோனா இறப்பு நிவாரணத் தொகை பெறுவதில் சிக்கல் - உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

இறப்புச் சான்றிதழில் இறப்புக்கான காரணம் கொரோனா குறிப்பிடப்படுவதில்லை ;  காரணம் குறிப்பிடப்படாததால் நிவாரணத் தொகை பெறுவதில் சிக்கல் எழுவதாக  சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.    

வரும் நாட்களில் இறப்பு எண்ணிக்கை அதிகமாகுமா?

தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 8602 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். 29907 பேர் ஆகிச்ஜன் உதவி கொண்ட படுக்கைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதாவது, தற்போது சிகிச்சைப் பெற்று வருபவர்களில், 20 சதவீதம் பேருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூன் 1ம் தேதி இந்த எண்ணிக்கை  16 சதவிகிதமாக குறைந்து இருந்தது.    


பெரும்பாலான கொரோனா நோயாளிகள் நுரையீரல் பிரச்சனையை அனுபவிக்கின்றனர். ஆனால் இது மருத்துவ ரீதியாக முக்கியமான பிரச்னை அல்ல.  சிலருக்கு மட்டுமே நிமோனியா எனும் நுரையீரல் பாதிப்பு ஏற்படுகிறது. அப்போது நுரையீரலில் உள்ள சிறு காற்று பைகள் வீக்கமடைகின்றன. மூச்சுத் திணறல் கடுமையான நிலைக்கு செல்லும் போது ஆக்ஸிஜன் உதவி தேவைப்படும். 

தமிழ்நாட்டில் கொரோனா இறப்பு எண்ணிக்கை சரியத் தொடங்கியுள்ளது

தமிழ்நாட்டில் கொரோனா இறப்பு எண்ணிக்கை சரியத் தொடங்கியது. கடந்த 24 மணி நேரத்தில் 358 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தனர். கடந்த ஜூன் 1ம் தேதி 490 என்ற உச்சகட்ட இறப்புக்குப் பின், அன்றாட இறப்பு எண்ணிக்கை தமிழகத்தில் சரியத் தொடங்கியது. 




     

Background

தமிழ்நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில் 16,813 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில், அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 2,236 பேரும், அதைத் தொடர்ந்து சென்னையில் 1,223 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று, மாநிலம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 358ஆக உள்ளது.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.