PMK Meeting: மேடையிலேயே வாக்குவாதம்.. அன்புமணி-ராமதாஸ் மோதல்! பரபரப்பில் பாமக!

PMK Meeting: பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணியிடையே ஏற்ப்பட்ட வார்த்தை மோதலால் பாமகவினர் இடையே பரபரப்பு ஏற்ப்பட்டது.

Continues below advertisement

புதுச்சேரியில் நடைப்பெறும் வரும் பாமக பொதுக்குழு கூட்டத்தில், நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மேடையிலேயே வாக்குவாதம் ஏற்பட்டது தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை கிளப்பியுள்ளது 

Continues below advertisement

பாமக பொதுக்குழு கூட்டம்: 

புதுச்சேரியில் பாமகவின் பொதுக்குழு கூட்டம் நடைப்பெற்று வருகிறது, இந்த கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் கெளரவத் தலைவர் ஜி.கே மணி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கட்சியின் செயல்பாடுகள் மற்றும் வருங்கால திட்டங்கள் குறித்து ராமதாஸ் கேட்டறிந்து வந்தார்.

இதையும் படிங்க: Anbumani: கூட்டணி என்றால் வாயை மூட வேண்டுமா ? திருமாவளவனுக்கு அன்புமணி சரமாரி கேள்வி..

வார்த்தை மோதல்: 

இந்த நிலையில்  பாமக இளைஞரணி தலைவராக முகுந்தன் நியமனம் என ராமதாஸ் அறிவித்த நிலையில் அன்புமணி ராமதாஸ் மேடையிலேயே கடும் எதிர்ப்பு தெரிவித்தார், “கட்சியில் இணைந்த சில மாதங்களிலேயே பொறுப்புகள் வழங்கப்படுவதாக அன்புமணி மேடையிலேயே குற்றம் சாட்டினார். கட்சியில் இத்தனை காலமாக உழைத்தவர்கள் மேலும் பாமகவை குடும்ப கட்சியாக மாற்ற முயற்சியா என்று அன்புமணி காட்டமாக தெரிவித்தார். 

இதற்கிடையில் பேசிய ராமதாஸ் ”கட்சியை உருவாக்கியவன் நான், வன்னியர் சங்கத்தை உருவாக்கியவன் நான், முடிவை நான் தான் எடுப்பேன் என ராமதாஸ் தொண்டர்களிடையே  காட்டமாக பேசினார்.

இதையும் படிங்க: Anna University Issue: அண்ணா பல்கலை. மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு; கல்வி கட்டணமில்லை- நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பனையூரில் கட்சி அலுவலகம்: 

இதையடுத்து பேசிய ராமதாஸ் “நான் எடுத்த முடிவுதான் கட்சியின் முடிவு, விருப்பம் இல்லாதவர்கள் யாராகினும் கட்சியிலிருந்து வெளியேறலாம் என ராமதாஸ் அன்புமணிக்கு மேடையிலேயே அறிவுறுத்தியது சலசலப்பை ஏற்ப்படுத்தியது. 

அடுத்து பேசிய அன்புமணி, “பனையூரில் புதிதாக கட்டியுள்ள எனது அலுவலகத்தில் இனி தொண்டர்கள் அங்கு ப்என்னை சந்திக்கலாம் என்று அன்புமணி ராமதாஸ் கோபாமாக கையில் இருந்த மைக்கை கீழே போட்டது  தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியது. 

யார் இந்த முகுந்தன்? 

பாமக கட்சியின் இளைஞர் அணி தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள முகுந்தன் மருத்துவர் ராமதாஸ் மூத்த மகள் காந்திமதியின் மகன் தான் இந்த மூகுந்தன், தனது பேரனை ராமதாஸ் இளைஞர் அணி தலைவராக அறிவித்தார், இருப்பினும் ராமதாஸ் முகுந்தனை மேடைக்கு அழைத்தும் முகுந்தன் மேடைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

சில நாட்களாகவே அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே பனிப்போர் நிலவி வந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது கட்சி கூட்டத்தில்  இருவரும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டது கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. 

Continues below advertisement