TN Corona LIVE Updates : மாநகர பேருந்துகள் நாளை முதல் 50% இருக்கைகளுடன் இயங்கும்

TN Corona Cases LIVE Updates: தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், பொதுமக்களிடம் ரெம்டெசிவர் மருந்து கேட்டு அலைக்கழிக்க கூடாது

ABP NADU Last Updated: 05 May 2021 11:40 AM
இந்தியாவில் 3-வது கொரோனா பரவல் தவிர்க்க முடியாதது - முதன்மை அறிவியல் ஆலோசகர் டாக்டர் விஜய் ராகவன்

 


சார்ஸ்-கோவி-2 கொரோனா வைரஸின் பரவலை கருத்தில் கொண்டு பார்க்கும் போது, இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்றின் மூன்றாவது அலை தவிர்க்க முடியாததாக உள்ளது என இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் டாக்டர் விஜய் ராகவன் தெரிவித்தார்.  இருப்பினும், மூன்றவாது அலையின் கால அளவை கணிக்க இயலாது என்றும் கூறினார். 


நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர்" தற்போது பெரும் சேதத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இரண்டாவது அலையின் வீரியத்தை வல்லுநர்கள் முன்கூட்டிய கணிக்க தவறவிட்டனர்" என்பதனை ஒப்புக் கொண்டார்.

சென்னையில் கடந்த 30 நாட்களாக கொரோனா தடுப்பூகளின் போடப்படும் நிலை

மாநகர பேருந்துகள் நாளை முதல் 50% இருக்கைகளுடன் இயங்கும்

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று அதிக அளவில் பரவி வருவதை தடுக்கின்ற வகையில், தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005-ன் கீழ், தமிழ்நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமுலில் உள்ளது. அதனைத் தொடர்ந்து, 03.05.2021 அன்று தமிழ்நாட்டில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்திட, 06.05.2021 முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில், அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 50 சதவிகித இருக்கைகளில் மட்டுமே பொதுமக்கள் அமர்ந்து பயணித்திட அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


நாளை (06.05.2021) முதல் மாநகர் போக்குவரத்தக் கழகத்தின் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளில், 50 சதவிகித இருக்கைகளில் மட்டுமே பயணிகள் பயணம் செய்திட அனுமதிக்கப்படுவார்கள். மேலும், பயணிகள் உரிய முகக்கவசம் அணிந்து, தனிநபர் இடைவெளியினைப் பின்பற்றி பாதுகாப்பான முறையில் பயணம் செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.    

அனைத்து மத்திய அரசு பணியாளர்களும் தடுப்பு மருந்து எடுக்க வேண்டும் - மத்திய அமைச்சர்

அனைத்து மத்திய அரசு பணியாளர்களும் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் விரைவில் தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ளுமாறு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வேண்டுகோள்

கொரோனா நோய்த் தோற்று - மகாராஷ்டிரா மாநிலம் நிலவரம்

கடந்த 10 நாட்களாக, மகாராஷ்ட்ராவில் அன்றாட புதிய பாதிப்புகளை விட, தினமும் குணமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருபர்களின் எண்ணிக்கை விகிதம் கணிசமாக குறைந்து வருகிறது. கடந்த ஏப்ரல் 22ம் தேதி 6,99, 858 பேர்  கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், தற்போது 6,41,910 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் அம்மாநிலத்தில் 891 பேர் கொரோனா நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். 

பெருநகர சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்பு அறிவிப்பு

பெருநகர சென்னை மாநகராட்சி, கொரோனா நோய் தடுப்பு பணியில் பணிபுரிய, ஆய்வக நுட்புனர்கள் மற்றும் ஊடு கதிர் தொழிற் நுட்புனர்கள் நேரடியாக கல்வித்தகுதிக்கான அசல் சான்றிதழுடன் நேர்காணலில் கலந்துக்கொள்ளலாம்.


நேரம் : 10 am to 5 pm


நாள் : 06.05.2021 & 07.05.2021


மேலும் விவரங்களுக்கு

கடந்த 24 மணி நேரத்தில் 3,82,847 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,82,847 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. 5,508 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோய்த் தோற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.     

ஆஸ்திரேலிய வீரர்கள் இந்தியாவிலோ அல்லது மற்ற நாடுகளிலோ தங்கலாம் - ஆஸ்திரேலிய

கோவிட்-19 தொற்று பரவல் காரணமாக ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து ஆஸ்திரேலிய வீரர்கள் இந்தியாவிலோ அல்லது மற்ற நாடுகளிலோ தங்கலாம் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.

நாட்டில் ரெம்டெசிவிர் மருந்தின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு வருகிறது - மத்திய அமைச்சர்

நாட்டில் ரெம்டெசிவிர் மருந்தின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு வருகிறது என்று மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை இணை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். இந்த வருடம் ஏப்ரல் 12-ஆம் தேதி 37 லட்சமாக இருந்த ரெம்டெசிவிர் மருந்தின் உற்பத்தி, மே 4-ஆம் தேதி, 1.05 கோடியாக வளர்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்தார்.   

மாநிலத்தின் மொத்த இறப்பு எண்ணிக்கை 14,612 ஆக அதிகரித்துள்ளது

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபர்களின் எண்ணிக்கை 1,25,230 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தின் மொத்த இறப்பு எண்ணிக்கை 14,612 ஆக அதிகரித்துள்ளது.    

சேலம் உருக்காலையில் மருத்துவ ஆக்சிஜன் தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

“சேலம் உருக்காலையில் உள்ள ஆக்ஸிஜன் தயாரிக்கும் கட்டமைப்பை மேம்படுத்தி மருத்துவ ஆக்சிஜன் தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் தமிழக சுகாதாரத் துறை செயலாளர் திரு ஜெ.ராதாகிருஷ்ணனுக்கு கடிதம் எழுதினார்.  


24 பிரிவுகளில் 40 லட்சம் மருத்துவப் பொருட்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன

மருத்துவ சாதனங்கள், மருந்துகள், ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், வென்டிலேட்டர்கள் என 24 பிரிவுகளில் 40 லட்சம் மருத்துவப் பொருட்கள் இந்தியாவுக்கு உலக நாடுகள் உதவிக் கரமாக  நீட்டியுள்ளன என மத்திய அரசு தெரிவித்தது. 


இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், " வெளிநாடுகளில் இருந்து வந்த கோவிட் நிவாரண பொருட்களை தேவைப்படும் மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்வதில் ஒருங்கிணைந்து செயல்பட தனிப்பிரிவு ஒன்றை கூடுதல் செயலாளர் தலைமையில் மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஏற்படுத்தியது.  முதல் சில நாட்களில், கோவிட் நோயாளிகள் அதிகமாக இருக்கும் எய்ம்ஸ் மற்றும் மத்திய மருத்துவமனைகள் இருக்கும் மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன.  அதோடு தில்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் மத்திய அரசின் மருத்துவமனைகள் மற்றும் டிஆர்டிஓ மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டன. 


இந்தப் பொருட்கள் நாடு முழுவதும் 31 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில்  உள்ள 38 முக்கிய மருத்துவமனைகள் உட்பட 86 மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன" என்று தெரிவிக்கப்பட்டது.  

Background

ரெம்டெசிவர் உயிர்காக்கும் மருந்து அல்ல. இதனை தனியார் மருத்துவர்கள் தேவையில்லாமல் பொதுமக்களுக்கு பரிந்துரைக்கின்றனர். கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவர் மருந்து கட்டாயம் அல்ல. அரசு மருத்துவமனைகளில் ரெம்டெசிவர் மருந்து போதிய அளவில் இருப்பு உள்ளது. தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், பொதுமக்களிடம் ரெம்டெசிவர் மருந்து கேட்டு அலைக்கழிக்க கூடாது என்று தமிழக பொது சுகாதார துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்தார். 


மேலும் பொதுமக்கள் அவசியமில்லாமல் இம்மருந்துக்காக காத்திருக்க தேவையில்லை. தற்பொழுது சென்னையில் மட்டும் ரெமிடெசிவர் மருந்து விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் தமிழகம் முழுவதிலும் உள்ள முக்கிய மருத்துவமனைகளிலும் ரெமிடெசிவர் மருந்தை விநியோகிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.  


இதற்கிடையே, செங்கல்பட்டு அரசு மருத்துவமையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு காரணாமாக கொரோனா பாதிப்புக்கு உள்ளான 4 பேர் அடுத்ததுத்து உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.     

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.