தமிழ்நாடு இன்று புதிதாக 21410 கொரோனா பாதிப்புகளைப் பதிவு செய்துள்ளது. இன்று மட்டும் 443 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர் இதில் தனியார் மருத்துவமனையில் இறந்தவர்கள் எண்ணிக்கை 166. 32,472 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ள நிலையில் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,57,463ஆகப் பதிவாகியுள்ளது. மேலும் வெளிமாநிலங்களில் இருந்து சாலை வழியாகப் பயணித்து வந்தவர்களில் 4 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதில் ஆந்திராவிலிருந்து வந்தவர்களில் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் இரண்டு கோடியே என்பது லட்சத்துக்கும் மேலானவர்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.