தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் தக்காளியின் விலையை கட்டுப்படுத்துவது தொடர்பாக, அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற உள்ளது.


ஆலோசனைக் கூட்டம்:


தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்தால் அதனை ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு அதனை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக கூட்டுறவு  அமைச்சர் பெரிய கருப்பன் அண்மையில்  தெரிவித்திருந்தார். இதனிடையே, தக்காளி விலை மீண்டும் உச்சம் தொட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்வது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் பெரிய கருப்பன் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. அங்கு எடுக்கப்படும் ஆலோசனைகளின் அடிப்படையில், ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை எப்போது தொடங்கும், ஒரு கிலோ எவ்வளவுக்கு விற்பனை செய்யப்படும், கொள்முதல் விலைக்கே வழங்கலாமா, ஒரு குடும்ப அட்டைதாரருக்கு எத்தனை கிலோ வழங்கப்படும் போன்ற அறிவிப்புகள், முதலமைச்சரின் ஒப்புதலுடன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தங்கமான தக்காளி:


தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரமாக தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரு கிலோ தக்காளி ரூ.130 வரை விற்கப்படுவதால் பொதும்மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணிவரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650க்கும் மேற்பட்ட வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.


சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தினசரி மொத்த வியாரிகள் விற்பனைக்காக காய்கறிகள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும். தமிழ்நாட்டிலிருந்து மட்டுமல்லாமல், இந்தியா முழுவதிலும் இருந்து பல ரக காய்கறிகள்  வரும். கோயம்பேடு சந்தையிலிருந்து சிறு மொத்த வியாபாரிகள் தேவையாக காய்கறிகளை வாங்கிச் செல்வார்கள். ஆனால் சில்லறை வியாபாரத்தில் காய்கறிகளின் விலை 20 முதல் 30 ரூபாய் நாட்டின் பெரும்பாலான மாநிலங்களுக்கு மழை தரும். பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் அநேக மாநிலங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் இருக்கும் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி வரத்து குறைந்துள்ளதாக வியாபாரிகள் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சரிந்த வரத்து - உயர்ந்த விலை:


 தக்காளியின் வரத்து குறைந்துள்ளதால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் வரை தக்காளியின் விலை 20 முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் கடந்த சில தினங்களாக தக்காளியின் விலை ரூ.100 வரை உயர்ந்தது.  ஜூன் 27 ஆம் தேதி தக்காளி ஒரு கிலோ 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து 75 ரூபாய்க்கும் 60 ரூபாய்க்கும்  விற்பனை செய்யப்பட்டது. தற்போது மீண்டும் உயர்ந்து ஒரு கிலோ தக்காளி 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மக்கள் என்ன சமைப்பது என தெரியாமல் திக்கு முக்காடியுள்ளனர். மொத்த வியாபார கடைகளில் ரூயாய் 90 க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், சில்லறை கடைகளில் ஒரு கிலோ தக்காளி 120 முதல் 130 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தக்காளி இல்லாமல் என்ன சமைப்பது என பட்டியல் போட்டு சமைத்து வருகின்றனர். அடுத்து சில தினங்களுக்கு தக்காளியின் விலை இப்படி தான் இருக்கும் எனவும், அதன் காய்கறி வரத்தை பொறுத்து விலை படிப்படியாக குறையும் என்னவும் கூறப்படுகிறது.


அதோடு,தேனி மற்றும் கொடைக்கானல் பகுதியில் தக்காளி கிலோவிற்கு ரூ.150-க்கு விற்கப்படுகிறது. வேலூர் திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலும் தக்காளி கிலோ ஒன்றிற்கு ரூ.120 முதல் ரூ.130 வரை விற்கப்படுவதாக கூறப்படுகிறது.