தயிர் பாக்கெட்டில் தஹி என்ற வார்த்தை இருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், இது தொடர்பாக முதலமைச்சர் முக ஸ்டாலின் காட்டமான பதிலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.






அந்த பதிவில், “எங்கள் தாய்மொழியைத் தள்ளிவைக்கச் சொல்லும் #FSSAI, தாய்மொழி காக்கும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்! மக்களின் உணர்வுகளை மதியுங்கள்! #StopHindiImposition குழந்தையைக் கிள்ளிவிட்டுச் சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம்! தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்துவிடுவீர்கள்!” என பதிவிட்டுள்ளார்.