MK Stalin Delhi Visit Live: டெல்லி விமான நிலையத்தில் முதல்வருக்கு திமுக எம்.பிக்கள் வரவேற்பு
தமிழ்நாடு முதல்வர் டெல்லி பயணம் தொடர்பான அனைத்து செய்திகளையும் இந்த லைவ் ப்ளாக்கில் காண்போம்.
முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று காலை 1௦ மணியளவில் டெல்லி விமான நிலையம் சென்றடைந்தார். கனிமொழி, டி.ஆர்.பாலு திமுக எம்.பிக்கள் விமான நிலையத்தில் முதலவரை வரவேற்றனர்.
பிரதமர் மோடியை சந்திப்பதற்காக, இன்று காலை 7.30 மணி அளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டார். சரியாக, 10 மணியளவில் டெல்லி விரைகிறார். டெல்லி விமான நிலையத்தில் திமுக எம்.பி-க்கள், தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் உள்ளிட்டோர் வரவேற்கின்றனர். அங்கிருந்து , நேராக தமிழ்நாடு இல்லம் செல்கிறார். பின்னர், மாலை 5 மணி அளவில் பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேசுகிறார்.
தமிழ்நாட்டில் கொரோனா சூழல், மருந்து மற்றும் ஆக்சிஜன் தேவைகள் குறித்து இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டுக்கான ஆக்சிஜன் தேவை மற்றும் மருந்துகளின் மீதான ஜி.எஸ்.டி. விலக்கு ஆகியன குறித்து ஏற்கெனவே பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழ்நாட்டில் புதிய அமைச்சரவைப் பதவியேற்ற பிறகான முதல் சந்திப்பாக இது இருக்கும்.
Background
தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்ற பின் முதன்முறையாக மு.க ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார். இன்று,மாலை பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். மூன்றாவது அலைக்கு முன்னதாகவே செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை செயல்பட வைப்பது, கொரோனா பெருந்தொற்று காரணமாக நீட் போன்ற அகில இந்திய நுழைவுத் தேர்வுகள் ரத்து செய்வது, தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசி டோஸ்களை ஒதுக்குவது போன்ற பல்வேறு கோரிக்கைகள் பிரதமரிடம் எடுத்துரைப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக சற்று முன் சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்டார் ஸ்டாலின்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -