ரயில்களில் 'Unreserved' பெட்டிகளின் எண்ணிக்கையை இந்திய ரயில்வே குறைத்ததற்கு மத்திய அரசை தமிழக முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். குறிப்பாக, வடக்கு ரயில் என்ற பெயரில் பரிதாபங்கள் யூடியூப் சேனல் வெளியிட்ட வீடியோவை மேற்கோள் காட்டிய அவர், "சமூக வலைத்தளம் முழுக்க இரயில் பரிதாபங்கள் வீடியோக்களைப் பார்த்தோம்! அதைப் பார்த்தாவது எளிய மக்களுக்கான Unreserved பெட்டிகளைக் கூட்டுவார்கள் என்று பார்த்தால், வழக்கம்போல பரிதாபங்களைத்தான் மேலும் கூட்டியுள்ளது Sadist அரசு!" என விமர்சித்துள்ளார்.

பரிதாபங்கள் வீடியோ:

நாடு முழுவதும் இயக்கப்படும் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் (Unreserved seats) எண்ணிக்கையை 4இலிருந்து 2ஆக இந்திய ரயில்வே குறைத்துள்ளது. 26 ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளை குறைத்து, அதற்கு பதிலாக AC 3 Tier பெட்டிகளை இணைக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.

சென்னையில் இருந்து அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாகச் செல்லும் ரயில்களின் முன்பதிவில்லா பெட்டிகள் இன்று முதல் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு, பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனம் எழுந்துள்ளது.

ரயில்களின் 'Unreserved' பெட்டிகளில் அமர்வதற்கு கூட இடம் இல்லாமல் பயணிகள் படிகள் வரை நின்று பயணம் செல்வது தொடர் கதையாகி வருகிறது. எனவே, 'Unreserved' பெட்டிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என தொடர் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

மத்திய அரசு மீது முதல்வர் சாடல்:

இதற்கிடையே, உ.பி.யில் நடக்கும் மகா கும்பமேளாவுக்காக போதுமான ரயில்கள் விடப்படவில்லை என புகார் எழுந்தது. குறிப்பாக, பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டிகளில் டிக்கெட் எடுக்காமலும் 'Unreserved' டிக்கெட் எடுத்தவர்களும் பயணம் செய்தனர்.

அதோடு நிற்காமல், சிலர், ரயிலை சேதப்படுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதை மையப்படுத்தி, பரிதாபங்கள் யூடியூப் சேனல் வெளியிட்ட வடக்கு ரயில் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்தது. 

 

இந்த நிலையில், வடக்கு ரயில் தொடர்பான பரிதாபங்கள் வீடியோவை மேற்கோள் காட்டி மத்திய அரசை விமர்சித்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், "எளிய மக்களுக்கான Unreserved பெட்டிகளைக் கூட்டுவார்கள் என்று பார்த்தால், வழக்கம்போல பரிதாபங்களைத்தான் மேலும் கூட்டியுள்ளது Sadist அரசு!" என குறிப்பிட்டுள்ளார்.