வேற்று மாநில மக்கள், பொது மொழியாக ஆங்கிலத்தை தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக ஹிந்தியில் பேச வேண்டும் என்று அமித்ஷா கூறியதற்கு கண்டனம் தெரிவித்து ட்விட்டர் பக்கத்தில் சில கருத்துகளை வெளியிட்டு இருக்கிறார்.


இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர், “ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைப் பயன்படுத்துங்கள்" என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்வது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல்.இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பழுதாக்கும் வேலையை பாஜக தலைமை தொடர்ந்து செய்கிறது. இந்தி மாநிலம் போதும், இந்திய மாநிலங்கள் தேவையில்லை என்று அமைச்சர் 
அமித்ஷா நினைக்கிறாரா? ஒற்றை மொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது. ஒற்றைத்தன்மை என்பது ஒருமைப்பாட்டையும் உருவாக்காது. ஒரே தவற்றைத் திரும்பத் திரும்பச் செய்கிறீர்கள். ஆனால் அதில் நீங்கள் வெற்றி பெற மாட்டீர்கள்!” என்று குறிப்பிட்டிருக்கிறார். 


 






 


 






முன்னதாக அமித்ஷாவின் பேச்சிற்கு கர்நாடக முன்னாள் முதல்வர் சித்த ராமையா மற்றும் கனிமொழி எம்.பி. ஆகியோர் கண்டனம் தெரிவித்து இருந்தனர். 


இது குறித்து அவர் பேசியிருப்பதாவது, “ கர்நாடக ஏகிகரணா இயக்கத்தைச் சேர்ந்த கவிஞர்கள், எழுத்தாளர்கள், நடிகர்களின் முயற்சிகள் பாதுகாக்கப்பட வேண்டும். இந்தி பேசாத மாநிலங்களில் இருந்து கலாச்சார பயங்கரவாதத்தை பாஜக கட்டவிழ்த்து விடுவதாக இருக்கிறது. 


மாநிலங்களுக்கு மொழி சுதந்திரம், கலாச்சார சுதந்திரத்தை அதிகமாக வழங்கவேண்டிய நேரம் இது என பாஜக உணர அனைத்து அகில இந்திய போட்டி தேர்வுகளும் மாநில மொழிகளில் நடத்தப்பட வேண்டும். இந்தி திணிப்பை தவிர்க்கும் வகையில் தேசிய கல்விக்கொள்கையில் மாற்றம் கொண்டு வரவேண்டும். அனைத்து மாநில மொழிகளும் அலுவல் மொழியாக்கப்பட வேண்டும். 


கனிமொழி




இது குறித்து கனிமொழி கூறும் போது, ”இணைப்பு மொழி என்று ஒன்றைத் திணிப்பது நாட்டை இணைக்கப் பயன்படாது அது பிரிக்கத்தான் பயன்படும். ஒன்றிய அரசும் அமைச்சர்களும் இந்தி எதிர்ப்பின் வரலாற்றை, தியாகங்களைத் தெரிந்து கொள்ளவேண்டும்” என்று கூறியிருக்கிறார். 

 

அமித்ஷா பேசியது என்ன?













இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில், ‘”நாட்டின் அலுவல் மொழியாக இந்தியை நடைமுறைப்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார். இது இந்தி மொழியில் முக்கியத்துவத்தை அதிகரிக்கும். வேற்று மாநில மக்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்ளும்போது பயன்படுத்த வேண்டிய மொழி இந்திதான். ஆங்கிலம் அல்ல. ஒரு மாநிலத்தின் உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக இல்லாமல், ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.


மேலும் கூறுகையில், ”பிற உள்ளூர் மொழிகளின் வார்த்தைகளை ஏற்று இந்தி மொழியை நெகிழ்வுத்தன்மையுடன் மாற்றாத வரையில், அந்த மொழியை மக்களிடம் பரப்ப முடியாது. மத்திய அமைச்சரவையின் 70 சதவீத நிகழ்ச்சி நிரல் இந்தியில் தயாரிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் 22,000-க்கும் மேற்பட்ட இந்தி ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்தி மொழியின் அடிப்படை அறிவைக் கொடுக்கவேண்டியது அவசியம். இந்தி தேர்வுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.


அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. வெவ்வேறு மொழிகளைப் பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ளும்போது, ​​அது இந்தியாவின் மொழியில் இருக்க வேண்டும். இந்தி மொழியாக இருக்க வேண்டும்.’ என்று பேசினார்.