தேசிய தன்னார்வ ரத்த தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட செய்தியில், "நவீன சுகாதார பாதுகாப்பு அமைப்பில், ரத்தம் தேவைப்படும் நபருக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ரத்தம் அளிப்பது மனித நேயமிக்க உயிர்காக்கும் செயலாகும்.


இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ரத்ததானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில், ஒவ்வோராண்டும் அக்டோபர் திங்கள் முதல் நாள் தேசிய தன்னார்வ ரத்ததான தினமாக கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டிற்கான தேசிய தன்னார்வ ரத்ததான தினத்தின் கருப்பொருள் "ரத்த நன்கொடையின் 20 ஆம் ஆண்டு கொண்டாட்டம். ரத்தக் கொடையாளர் அனைவருக்கும் நன்றிகள்" என்பதாகும்.


தன்னார்வ ரத்ததானத்தின் முக்கியத்துவத்தை மக்கள் அனைவரும் அறிந்திடும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், ஊர்வலங்கள். ரத்ததான முகாம்கள் மற்றும் ஊக்குவிப்பு நிகழ்ச்சிகளை தமிழ்நாடு செய்துவருகிறது. அரசு அனைத்து மாவட்டங்களிலும்


ரத்தம் என்பது நம் உடலில் ஓடக்கூடிய உயிர்காக்கும் திரவமாகும். நம் நுரையீரலில் இருந்து நாம் உயிர் வாழ்வதற்குத் தேவையான ஆக்சிஜனை உடலின் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச்செல்வதோடு, உடலிலுள்ள கழிவுப் பொருட்களையும் வெளியேற்றுகிறது.


நம் ஒவ்வொருவரின் உடலிலும் சுமார் 5 லிட்டர் ரத்தம் உள்ளது. ரத்ததானம் செய்ய 20 நிமிடங்கள்தான் ஆகும். இந்த ரத்ததானத்தின்போது 350 மி.லி ரத்தம் மட்டுமே எடுக்கப்படுகிறது. 18 வயது முதல் 65 வயது வரை உள்ள ஆரோக்கியமான ஆண் 3 மாதத்திற்கு ஒரு முறையும், பெண் 4 மாதத்திற்கு ஒரு முறையும் ரத்ததானம் செய்யலாம்.


ரத்ததானம் செய்தவுடன் அன்றாட வேலைகளை மேற்கொள்ளலாம். தானமாக பெறப்படும் ஓர் அலகு இரத்தம் நான்கு உயிர்களைக் காப்பாற்றும், ரத்த தானம் செய்தால் உடலில் புதிய செல்கள் உருவாகி தானம் செய்வோரின் உடல் நலனும் காக்கப்படுகிறது என்று மருத்துவர்கள் எடுத்துரைக்கிறார்கள். எனவே, அடுத்தவர் உயிர்காக்கும் ரத்ததானத்தினைத் தவறாது செய்வோம்.


தமிழ்நாட்டில் இதற்கென 107 அரசு ரத்த மையங்களும், 247 தனியார் ரத்த மையங்களும் செயல்பட்டு வருகின்றன. ரத்த மையங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக e-RaktKosh என்ற வலைதளம் செயல்பாட்டில் உள்ளது.


இத்தளத்தில் ரத்ததான முகாம் மற்றும் இரத்த கொடையாளர்கள் விவரங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். அதில் ரத்த வகைகளின் இருப்பைத் தெரிந்துக் கொள்ளும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் இத்தளத்தை பயன்படுத்தி தேவைப்படும் பெற்றுக்கொள்ளலாம்.


நேரங்களில் எளிதில் தங்களுக்கு ரத்தம் ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு இரத்த கொடையாளர்கள் மற்றும் ரத்ததான முகாம் அமைப்பாளர்களை அரசு சார்பில் பாராட்டிச் சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கிச் சிறப்பித்து வருகிறது.


கடந்த ஆண்டு அரசு ரத்த மையங்கள் வாயிலாக, இலக்கிற்கு மேல் 102 விழுக்காடு இரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சேகரிக்கப்படும் ரத்தமானது அரசு மருத்துவமனைகளில் தேவைப்படும் நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.


ஒருவருக்கு ரத்தம் தேவைப்படும்போது இனம், மதம். மொழிப் பாகுபாடின்றி வாழ்வளிக்க மனித நேயத்தோடு தன்னார்வ ரத்ததானம் செய்திட முன்வருபவர்களை உளமாற பாராட்டுகிறேன். மேலும், பொதுமக்களின் உயிர்காக்கும் சேவையில் நாம் அனைவரும் பங்கெடுக்க வேண்டுமென்றும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என கூறியுள்ளார்.