தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நவம்பர் 19 ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளசேதம் மற்றும் சேதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய நிவாரணம் குறித்து ஆலோசனை செய்வதற்காக இந்த அவசரக் கூட்டம் ஏற்பாடு செய்யப்படுகிறது. வெள்ளிக்கிழமை நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்க உள்ளனர்.
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பின், கொரோனா நெருக்கடியை தொடர்ந்து, தற்போது சென்னை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேதங்களை சரி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.
அது மட்டுமின்றி வெள்ளத்தால் பல லட்சம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி விவசாயிகள் கடும் சோகம் அடைந்துள்ளனர். இவ்வாறு பாதிப்புகள் பல வழிகளில் உள்ளன. வெள்ள நீர் சூழ்ந்தது, வெள்ளத் தடுப்பு நடவடிக்கை குறித்து எதிர்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளனர். உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் தமிழ்நாடு அரசுக்கு உள்ளது.
அதற்கான நிதி உள்ளிட்ட ஒப்புதல் பெற முறைப்படி தமிழ்நாடு அமைச்சரவையின் அனுமதி பெற வேண்டும் . அதன் அடிப்படையில் அவசரமாக அமைச்சரவை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் எதிர்கட்சிகள் வைத்த கோரிக்கையின் படி வெள்ள பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் இன்றைய நாளுக்கான முக்கியச் செய்திகள் சில...
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்