Breaking | சென்னை ஐஐடி முன்பு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய அரசியல், சமூக நிகழ்வுகளை உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டின் 9 மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கன மழை பெய்ய வாய்ப்பு. சேலம், தருமபுரி, விழுப்புரம், தி.மலை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல்
பழங்குடிகளுக்கான செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 84. எல்கர் பரிஷத் வழக்கில் மும்பை தலோஜா சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாதிரியார் ஸ்டேன் சுவாமி மரணம் அடைந்துள்ளார்.
சென்னை ஐஐடியில் தொடரும் சாதிய வன்முறை, இட ஒதுக்கீடு மீறல், மர்ம மரணங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று ஐஐடி அருகே தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
தமிழகத்தில் உள்ள பொது இடங்களில் மரம் நடுவதற்கும் அதை முறைப்படுத்தவும் வனத்துறை முதன்மை செயலாளர் சுப்ரியா சாகு தலைமையில் 10பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியீடு.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக சு.வெங்கடேசன் (எம்.பி)எழுப்பிய குரலுக்கு ஒன்றிய அமைச்சகம் பதில் அளித்துள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்தின் புதிய திருத்தப்பட்ட மதிப்பீடு ரூ 1977.80 கோடிகள். அதில் ரூ 1627.70 கோடிகள் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமை (JICA) 'ஜெய்கா' கடன் வாயிலாகவும் பெறுவதற்கு கடன் ஒப்பந்தம் போடப்பட்டுவிட்டது. திட்ட நிர்வாக ஆலோகரை நியமிக்க உலகளாவிய டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் எய்ம்ஸ் பணியை முடிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க ஒன்றிய அமைச்சகம் உறுதியளித்து உள்ளதாக சு.வெங்கடேசன் தெரிவித்தார்.
Background
பிரதமரை சந்தித்த பாஜகவினர் மூடிக்கிடக்கும் செங்கல்பட்டு தடுப்பூசி தயாரிக்கும் மையத்தை திறப்பது,காவிரி மேகாதாதுவில் கர்நாடகம் அணைகட்டுவது பற்றி பேசியிருக்கலாம்.ஆனால் ஜெய்ஹிந்த் பற்றி பேசினார்களாம்.எது முக்கியம்?தமிழக மக்களின் உயிரும்,உரிமைகளும் தானே?அதுபற்றி பிஜேபிக்கு என்ன கவலை! என கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -