அந்த குரல் போலியா? அப்போ என் குரலில் வெளியிடுங்கள் பார்ப்போம்... நிதியமைச்சருக்கு சவால் விட்ட அண்ணாமலை!

இந்த ஆடியோ போலியானது என்று சொல்லும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இதை செய்யுங்கள் என்று சவால் ஒன்றை விடுத்துள்ளார்.

Continues below advertisement

ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது மருமகன் சபரீசனும் இணைந்து 30 ஆயிரம் கோடி சம்பாதித்ததாக தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வீடியோ ஒன்று வெளியாகி மிக பெரியளவில் வைரலானது. 

Continues below advertisement

இதையடுத்து இந்த ஆடியோ குறித்து நேற்று இரவு 9 மணியளவில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இது என்னுடைய வாய்ஸ் இல்லை என 3 பக்கத்திற்கு அறிக்கை ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதில், அது என்னுடைய வாய்ஸ் இல்லை, இந்த ஆடியோ ஒரு மோசடி. ஆடியோ வெளியிட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று தெரிவித்திருந்தார். 

இந்தநிலையில், இந்த ஆடியோ போலியானது என்று சொல்லும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இதை செய்யுங்கள் என்று சவால் ஒன்றை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மருமகன் சபரீசன் ஆகியோர் ஊழல் மூலம், ஒரே ஆண்டில், 30,000 கோடி ரூபாய் பணத்தை முறைகேடாக சம்பாதித்ததாகப் பேசியிருந்த ஒலி நாடாவின் உண்மைத் தன்மையை, சுதந்திரமான, நியாயமான தடயவியல் தணிக்கை செய்யக் கோரி, தமிழக பாஜக தலைவர்கள் குழு ஒன்று, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை இன்று சந்திக்கவுள்ளது.

அண்ணாமலை ட்வீட்:

தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். இந்த ஒலி நாடா பொய்யானது, யார் குரலில் வேண்டுமானாலும் இப்படிப் பேசி வெளியிட முடியும் என்று சமாளித்துக் கொண்டிருப்பதால், அவர் அந்த ஒலி நாடாவில் பேசிய அதே கருத்துக்களை நான் பேசுவதைப் போல ஒரு ஒலி நாடாவை வெளியிடுமாறு சவால் விடுகிறேன். என்னுடைய குரல் மாதிரியை ஆய்வுக்கு நான் வழங்க தயார். தமிழக நிதி அமைச்சரும் தனது குரல் மாதிரியை வழங்கவேண்டும். இரண்டு ஒலி மாதிரிகளையும் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடக்கும் விசாரணை ஆணையத்திடம் சமர்ப்பிக்கலாம். இரண்டு ஒலி நாடாக்களின் உண்மைத் தன்மையை, நீதிமன்றம் விசாரித்துக் கூறட்டும்.

காலாகாலமாக பதவிகளை எல்லாம் வாரிசுகள் அனுபவித்துக் கொண்டு, தனது கட்சித் தொண்டர்களை போஸ்டர் மட்டுமே ஒட்ட வைத்து ஏமாற்றுவது போல, இது அத்தனை எளிதானதல்ல என்பதை தமிழக நிதியமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் சொல்லும் விசித்திரக் கதைகளை, வேறு வழியில்லாமல் உங்கள் கட்சியினர் நம்பலாம். ஆனால் நீங்கள் என்ன கதை சொன்னாலும் நம்புவதற்கு, நம் தமிழக மக்கள் ஒன்றும் திமுகவினர் அல்ல; அவர்களின் புத்திசாலித்தனத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்றும் தமிழக நிதியமைச்சரை மிக பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.” என குறிப்பிட்டு இருந்தார்.

Continues below advertisement