வரும் ஏப்ரல் 6ஆம் தேதி முதல் சட்டப்பேரவை(Tamil Nadu Assembly) மீண்டும் கூடுகிறது என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலத்தில் இன்று செய்தியாளர்களுக்கு சபாநாயகர் அப்பாவு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில், “மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்காக ஏப்ரல் 6ஆம் தேதி முதல் மீண்டும் சட்டப்பேரவை கூடுகிறது. விவாதத்தின்போது அனைத்து நாட்களிலும் கேள்வி நேரம் இருக்கும். தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது பற்றி வரும் 30ஆம் தேதி அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்யும்” என்று கூறினார்.
மேலும், ”பட்ஜெட் விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சி துணை தலைவர், பதிலுரையில் அமைச்சர்கள் பதில் தாருங்கள் என கூறினார். நிதி அமைச்சர் வெளியில் என்னிடம் தெரிவித்து தான் சென்றார். அதிமுக வினர் வெளிநடப்பு செய்திருக்க தேவை இல்லை” என்றார்.
தன்னை புகழ்ந்து பேசுவதையும் எதிர்கட்சிகளை விமர்சிப்பதையும் முதல்வர் அனுமதிப்பதில்லை என தெரிவித்த அவர், தலைமை செயலகத்தை , ஓமந்துரா தோட்டத்திற்கு மாற்றுவது குறித்து தீர ஆராய்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார் எனவும் தெரிவித்தார்..
ஆளுநர் முதல்வரிடம் விரைந்து நீட் மசோதாவை , குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்த தகவலை ஊடகங்கள் வாயிலாகவே தெரிந்து கொண்டேன் என்றும் அப்பாவு கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்