சிதம்பரத்தில் அறிவிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது. போராட்டங்களை தவிர்க்க ஒரு மாதம் சிதம்பரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்து கோட்டாட்சியர் ரவி உத்தரவிட்டிருந்தார். பொதுமக்கள் நலன் கருதி தற்போது 144 தடை உத்தரவு வாபஸ் பெறுவதாக கோட்டாட்சியர் ரவி தெரிவித்துள்ளார். 


முன்னதாக, கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நேற்று முதல் ஒரு மாதம் 144 தடை உத்தரவு பிறப்பித்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டார். சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மேல் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதிகோரி போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 






சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடராஜர் சன்னிதியில் மேடையேறி தேவாரம் திருவாசகம் பாடுவதற்கு சம்பந்தமாக ஏற்பட்டுள்ள சட்டப் பிரச்சனைகள் காரணமாக அரசின் அடுத்த முடிவு சட்ட வல்லுனர்கள் ஆலோசிக்கப்பட்டு வருவதாக நேற்று முதல் ஒரு மாத காலத்திற்கு சிதம்பரம் பகுதியில் மேற்கண்ட நடராஜர் கோவில் சம்பந்தமாக அரசியல் கட்சிகள் சமூக இயக்கங்கள் ஆர்ப்பாட்டம் செய்ய 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக சிதம்பரம் ஆர்டிஓ ரவி உத்தரவு பிறப்பித்து அறிவிப்பு செய்திருந்தார். 


இந்நிலையில், சிதம்பரத்தில் அறிவிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது. 




பிற முக்கியச் செய்திகள்:










மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண