தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் ஜனவரி 5-ந் தேதி தொடங்க உள்ளதாக தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு தகவல் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வந்த கூட்டத்தொடர், இந்த கூட்டத்தொடர் மூலம் மீண்டும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலே நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தொடர் கடந்த கூட்டத்தொடரைப் போலவே காகிதமில்லா கூட்டத்தொடராக நடைபெறும் என்றும் அப்பாவு தகவல் தெரிவித்துள்ளார்.
TN Assembly Session: சட்டமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 5-ந் தேதி தொடக்கம்... மீண்டும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில்!
சுகுமாறன் | 13 Dec 2021 01:48 PM (IST)
2022ம் ஆண்டுக்கான சட்டசபை கூட்டத்தொடர் வரும் ஜனவரி 5-ந் தேதி முதல் தொடங்க உள்ளதாகவும், மீண்டும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலே இந்த கூட்டத்தொடர் நடைபெறும் என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
தலைமை செயலகம்