TN Assembly Session 2022 LIVE: ஜனவரி 7-ஆம் தேதி வரை மட்டுமே சட்டப்பேரவை கூட்டத்தொடர் - அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு
TN Assembly Session 2022 LIVE Updates: தேர்தல் நேரத்தில் திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாகவும் ஆளுநர் உரை இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
#BREAKING
தமிழக சட்டப்பேரவையின் 2022ஆம் ஆண்டிற்கான முதல் கூட்டத் தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்குகிறது..!
நேரலை லிங்க் :
https://www.youtube.com/watch?v=xCZxeYXFhHo
#TNAssembly2022 | #TNAssembly
ஜனவரி 7-ஆம் தேதி வரை மட்டுமே சட்டப்பேரவை கூட்டத்தொடர் - அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு
நீட் தேர்வு தேவையில்லை என்ற நிலையில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது என்ற ஆளுநர் தனது உரையில் தெரிவித்தார்.
நுழைவுத் தேர்வுகள் கிராம மாணவர்களிடையே பாரபட்சத்தை ஏற்படுத்துகிறது. நீட் போன்ற நுழைவு தேர்வுகள் உயர்கல்விக்கு தேவை இல்லை என்று தமிழ்நாடு அரசு கருதுகிறது என்றும் தெரிவித்தார்.
தந்தை பெரியார், கலைஞர் கருணாநிதியின் கனவை நனவாக்கும் விதமாக அனைத்து சாதியினரையும் தமிழ்நாடு அரசு அர்ச்சகர்கள் ஆக்கியுள்ளது
பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்
தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை தொடர்வதில் அரசு உறுதியுடன் உள்ளது - ஆளுநர் சிறப்புரை
’இல்லம் தேடி கல்வித் திட்டம்’ மூலம் தரமான கல்வியை எல்லா குழந்தைகளுக்கும் தர தமிழக அரசு முனைந்திருக்கிறது
தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழி கொள்கையையே தமிழ்நாடு அரசு பின்பற்றும்
மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட ஒருபோதும் அனுமதி வழங்கக் கூடாது என்பதே இந்த அரசின் நிலைப்பாடு - ஆளுநர் சிறப்புரை
இயற்கையுடன் இணைந்து வாழும் தமிழகர்களின் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில், மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது - ஆளுநர் சிறப்புரை.
கொரோனா இரண்டாவது அலையை சிறப்பாக கட்டுப்படுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்து தனது முதல் உரையை தொடங்கினார் ஆளுநர் ரவி
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக விளக்குகிறது - ஆளுநர் ஆர்.என் ரவி
நீட் மசோதாவில் ஆளுநரின் செயலைக் கண்டித்து விசிக,அதிமுக உறுப்பினர்கள் சட்டமன்றக் கூட்டத்தொடரில் இருந்து வெளிநடப்பு செய்தனர்
தமிழக சட்டப்பேரவையின் 2022ஆம் ஆண்டிற்கான முதல் கூட்டத் தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்குகிறது..!
சென்னை கலைவானர் அரங்கில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஓபிஎஸ்-இபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அதேபோல், ஆட்சி அமைந்ததும் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்ட தமிழக அரசுக்கு பாராட்டு, தற்போது ஏற்பட்டுவரும் ஒமைக்கிரான் பாதிப்பை கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் ஆளுநர் பேசவுள்ளதாக ராஜ்பவன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆளுநர் உரை முடிந்த பிறகு, சபாநாயகர் அப்பாவு தலைமையில், முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோரை கொண்ட அலுவல் ஆய்வு குழு கூட்டம் தொடங்கி, சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்வர்.
ஆளுநர் உரையில், சித்திரை 1ஆம் தேதிக்கு பதிலாக, மீண்டும் தை மாதம் முதல் தேதியை தமிழ் புத்தாண்டாக அறிவிக்க சட்டத் திருத்தம் கொண்டுவரப்படும் என அறிவிக்க அதிக வாய்ப்பிருக்கிறது. அதேபோல், சென்னையில் மழை காலத்தின்போது தண்ணீர் தேங்குவதை தடுக்க, நீர் நிலைகளை தூர்வாரி ஆழப்படுத்துவது, ஆக்கிரமிப்புகளை அடியோடு அகற்றது தொடர்பான அறிவிப்பும் இடம் பெறும் என கூறப்படுகிறது. மேலும், தேர்தல் நேரத்தில் திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாகவும் ஆளுநர் உரை இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்துக்கட்சிகளும் ஒருமனதாக நிறைவேற்றிய சட்ட மசோதாவை’ (The Undergraduate Medical Degree Courses Bill, 2021 ) குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் எந்த சட்டப் பேரவையை அவமதிக்கிறாரோ அதில் இன்று மேதகு ஆளுநர் உரையாற்ற வருகிறார்.
சட்டப் பேரவையையும், அவர் ஆளுநர் ஆவதற்கு வழிவகுத்த அரசியலமைப்பு சட்டத்தையும் இப்படி அவமதிப்பது சரிதானா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய அரசியலமைப்பின் 176வது பிரிவின் படி, சட்டமன்றப் பேரவைக்கான பொதுத் தேர்தல் ஒவ்வொன்றுக்கும் பின்பு நடைபெறும் முதல் கூட்டத்தொடரின் தொடக்கத்திலும், ஒவ்வோர் ஆண்டின் முதல் கூட்டத்தொடரின் தொடக்கத்திலும், சட்டமன்றப் பேரவையில் ஆளுநர் உரையாற்றி அதனைக் கூட்டியதற்கான காரணங்களையும் சட்டமன்றத்திற்குத் தெரிவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கலைவானர் அரங்கில், இன்று காலை 10 மணி முதல் குளிர்கால கூட்டத்தொடர் கூட்டப்படுகிறது. முதல் கூட்டம் என்பதால் முதல் நாளான இன்று ஆளுநர் உரையுடன் கூட்டம் தொடங்கும். ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் இருந்து புறப்பட்டு, சட்டப்பேரவை நடைபெறவுள்ள கலைவாணர் அரங்கிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வருவார். அவரை சட்டப்பேரவையின் சபாநாயகரான அப்பாவு, வரவேற்று பேரவைக்குள் அழைத்து செல்வார்.
இந்த சட்டமன்றக் கூட்டத்தொடர் முழுவதும் நேரலை ஒளிபரப்பு செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முன்னதாக, திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளில் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்வோம் என்று கூறியிருந்தது. ஆனால், கடந்த கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் நடைபெற்றதால் அதனை செய்ய முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, " சட்டப்பேரவை கூட்டத்தொடரை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு. அது பரிசீலனையில் உள்ளது. கட்டாயம் அது நிறைவேற்றப்படும்" என்று தெரிவித்திருந்தார்.
நேற்று பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ பிரபாகரனுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இந்த கூட்டத்தொடர் முழுவதும், தீவிர கொரோனா நெறிமுறைகள் கடைபிடிக்கப்படும் என்று சபாநாயகர் முன்னதாக தெரிவித்திருந்தார்.
Background
TN Assembly Session 2022 LIVE Updates:
சென்னை கலைவானர் அரங்கில், இன்று காலை 10 மணி முதல் குளிர்கால கூட்டத்தொடர் கூட்டப்படுகிறது. முதல் கூட்டம் என்பதால் முதல் நாளான இன்று ஆளுநர் உரையுடன் கூட்டம் தொடங்கும். ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் இருந்து புறப்பட்டு, சட்டப்பேரவை நடைபெறவுள்ள கலைவாணர் அரங்கிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வருவார். அவரை சட்டப்பேரவையின் சபாநாயகரான அப்பாவு, வரவேற்று பேரவைக்குள் அழைத்து செல்வார்.
ஆளுநர் உரையில், சித்திரை 1ஆம் தேதிக்கு பதிலாக, மீண்டும் தை மாதம் முதல் தேதியை தமிழ் புத்தாண்டாக அறிவிக்க சட்டத் திருத்தம் கொண்டுவரப்படும் என அறிவிக்க அதிக வாய்ப்பிருக்கிறது. அதேபோல், சென்னையில் மழை காலத்தின்போது தண்ணீர் தேங்குவதை தடுக்க, நீர் நிலைகளை தூர்வாரி ஆழப்படுத்துவது, ஆக்கிரமிப்புகளை அடியோடு அகற்றது தொடர்பான அறிவிப்பும் இடம் பெறும் என கூறப்படுகிறது. மேலும், தேர்தல் நேரத்தில் திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாகவும் ஆளுநர் உரை இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், ஆட்சி அமைந்ததும் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்ட தமிழக அரசுக்கு பாராட்டு, தற்போது ஏற்பட்டுவரும் ஒமைக்கிரான் பாதிப்பை கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் ஆளுநர் பேசவுள்ளதாக ராஜ்பவன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆளுநர் உரை முடிந்த பிறகு, சபாநாயகர் அப்பாவு தலைமையில், முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோரை கொண்ட அலுவல் ஆய்வு குழு கூட்டம் தொடங்கி, சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்வர்.
திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளில் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்வோம் என்று கூறியிருந்தது. ஆனால், கடந்த கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் நடைபெற்றதால் அதனை செய்ய முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, " சட்டப்பேரவை கூட்டத்தொடரை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு. அது பரிசீலனையில் உள்ளது. கட்டாயம் அது நிறைவேற்றப்படும்" என்று தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -