வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும்.
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.
வடக்கு அந்தமான் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிழக்கு வங்கக் கடல் பகுதியில் 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்றும், தென் மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் வீசும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்தியாவின் 80 சதவீத பகுதிகளுக்கு பெரும்பாலும் மழைப் பொழிவை தருவது தென் மேற்கு பருவமழைதான். ஆனால், இதில் தமிழகம் மட்டும் விதிவிலக்கு, தமிழகத்தில் மட்டும்தான் தென்மேற்கு பருவமழையை விட, அக்டோபர் மாதத்தில் தொடங்கும் வடகிழக்கு பருவமழைதான் அதிக மழைப் பொழிவை தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்