தமிழக அரசு தலைமை தலைமை வழக்கறிஞராக திமுக அரசு பொறுப்பேற்றதும் நியமிக்கப்பட்டவர் மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம். இதற்கான உத்தரவை அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பிறப்பித்தார். இந்நிலையில், தனிப்பட்ட காரணங்களால் தன்னுடைய பதவியிலிருந்து விலக சண்முகசுந்தரம் முடிவு எடுத்துள்ளார்.
திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றிய சண்முகசுந்தரம், இங்கிலாந்து நீதிமன்றங்களிலும் பணியாற்றிய பழுத்த அனுபவம் மிக்கவர். அரசின் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், மாநில அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த சண்முகசுந்தரம், முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மிக நம்பிக்கைக்குரியவராக திகழ்ந்தார். அதன்காரணமாகவே கலைஞர் எழுதிய ‘நெஞ்சுக்கு நீதி’ புத்தகத்தின் 4ஆம் பாகத்தில் சண்முகசுந்தரம் குறித்தும் அவரது குடும்ப பாரம்பரியம் பற்றியும் எழுதியுள்ளார்.
அதேபோல், ராஜீவ்காந்தி கொலை வழக்கு விசாரணையில் ஜெயின் கமிஷனுக்கு உதவியாக சண்முகசுந்தரம் அரசு சார்பில் நியமிக்கப்பட்டவர். குறிப்பாக, முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு, டான்சி நில அபரிப்பு வழக்குகளில் அவருக்கு எதிராக முக்கியமான சட்ட பணிகளை ஆற்றியவர் சண்முகசுந்தரம்.
1995ஆம் ஆண்டு ஜெயலலிதாவிற்கு எதிரான டான்சி நில அபகரிப்பு வழக்கில் ஆவணங்களை திரட்டிக்கொண்டிருந்த சண்முகசுந்தரம் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்களின் தீவிர முயற்சிக்கு பின்னர் காப்பாற்றப்பட்டார்.- அதன்பிறகு, 2-6-1995 ல் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் சண்முகசுந்தரம் தாக்கப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை நடப்படவேண்டும் என்று ஒரு தனித் தீர்மானமே நிறைவேற்றப்பட்டது.
கடந்த 2021ல் திமுக ஆட்சி அமைந்ததும் சண்முகசுந்தரத்தை தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக நியமிக்கவேண்டும் என்று முதல்வர் அளித்த பரிந்துரையின்படி, அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவரை தமிழக அட்வகேட் ஜெனராலக நியமித்தார்.
இந்நிலையில், வயது முதிர்வு, வேலை பளு உள்ளிட்ட தனிப்பட்ட காரணங்களால் தன்னுடைய தலைமை வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்ய சண்முகசுந்தரம் முடிவு எடுத்துள்ளாதாக தெரிகிறது. கடந்த சில மாதங்களாகவே இது குறித்து யோசித்தவந்த சண்முகசுந்தரம், இன்றையை பேரவை முடிந்ததும் தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அளிக்கவுள்ளார்.அந்த கடிதம் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்டு, தமிழக அரசின் பரிந்துரையின்படி, விரைவில் புதிய தலைமை வழக்கறிஞர் நியமிக்கப்படுவார் என கூறப்படுகிறது