தமிழ்நாட்டில் 28 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 3 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமானது மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.


 28 மாவட்டங்கள்:


சென்னை திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, நாமக்கல், சேலம், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், நீலகிரி மற்றும் கோவை ஆகிய 28 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.


 






மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் விதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது


மேலும், நாளை மற்றும் நாளை மறுநாள், தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.






மீனவர்களுக்கு எச்சரிக்கை:


மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால், அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


RMC Chennai (imd.gov.in) வானிலை தொடர்பான கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும். 


வானிலை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கையை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்tamilrain_fc.pdf (imd.gov.in)