தென் மண்டல ஐ.ஜி அஸ்ரா கர்க், பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி ஆசியம்மாள், கோவை ஐ.ஜி சுதாகர் உள்ளிட்ட 27 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 


இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், தென் மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க், சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தென் மண்டல புதிய ஐ.ஜியாக நரேந்திர நாயரும் மேற்கு மண்டல ஐ.ஜியாக பவானீஸ்வரியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி ஆசியம்மாள் சென்னை காவல்துறை தலைமையக ஐ.ஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 


அதேபோல், திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்தியபிரியா பொருளாதாரா குற்றப்பிரிவு ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோவை மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர், சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். காவல்துறை நவீனமயமாக்கல் துறை பிரிவு ஐ.ஜி சந்தோஷ் குமார் லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி மற்றும் கூடுதல் இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையாக இருந்த கபில்குமார் சரத்கர் சென்னை காவல் ஆணையராக தலைமையக ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி சரக டிஜிபியாக இருந்த சரவண சுந்தர் கோவை சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.  


மேலும், டான்ஜெட்கோ லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பியாக பிரஜ் கிஷோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாநகர காவல் ஆணையராக காமினி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுரை மாநகர காவல் ஆணையராக லோகநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பாலநாகதேவி பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 


அதேபோல், சென்னை வடக்கு மண்டல இணை ஆணையராக இருந்த ரம்யா பாரதி மதுரை சரக டிஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை வடக்கு மண்டல இணை ஆணையராக சாமூண்டீஸ்வரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி சரக டிஐஜி ராஜேந்திரன் ஐபிஎஸ் இன்டெலிஜென்ஸ் சிஐடி டிஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மின்சாரத்துறை லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி ஆக இருந்த வன்னியபெருமாள் சிவில் சப்ளை சிஐடி டிஜிபி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபி அபின் தினேஷ் மொடாக் மாநில குற்ற ஆவண காப்பகம் ஏடிஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


பிரமோத்குமார் காகித மற்றும் அச்சு பொருள் துறை தலைமை லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ராஜிவ் குமார் காவலர் பயிற்சி கல்லூரி டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிவில் சப்ளை சிஐடி பிரிவு டிஜிபி ஆக வன்னிய பெருமாள் நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை சரக டிஐஜியாக இருந்த பொன்னி காஞ்சிபுரம் சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.


காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜியாக இருந்த பகலவன் திருச்சி சரக டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். மாநில குற்ற ஆவண காப்பக கூடுதல் டிஜிபியாக அபின் தினேஷ் மோடக் நியமிக்கப்பட்டுள்ளார்.