18 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அதிரடி காட்டியுள்ளது. சென்னை மாநகர வடக்கு கூடுதல் ஆணையர் அஸ்ரா கர்க், தெற்கு கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா உள்ளிட்டோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ், மதுவிலக்கு அமலாக்குத்துறை கூடுதல் டிஜிபி ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தாம்பரம் காவல் ஆணையராக அபின் தினேஷ் மோடக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு பிறகு காத்திருப்போர் பட்டியலில் இருந்த மகேஷ் குமார் அகர்வால், ஆயுதப்படை கூடுதல் டிஜிபி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


சிபிசிஐடி கூடுதல் டிஜிபி வெங்கட்ராமன் நிர்வாக கூடுதல் டிஜிபி ஆக மாற்றப்பட்டுள்ளார். சிபிசிஐடி ஐஜி அன்பு, சிபிசிஐடி கூடுதல் டிஜிபிக்கான பொறுப்புகளையும் கவனிக்க உள்ளார். சென்னை தெற்கு கூடுதல் ஆணையர் பிரேமானந்த சின்ஹா, தெற்கு மண்டல ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


சென்னை வடக்கு கூடுதல் ஆணையர் அஸ்ரா கர்க் வடக்கு மண்டல ஐஜி-ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். வடக்கு மண்டல ஐஜி நரேந்திர நாயர், சென்னை வடக்கு கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கண்ணன் ஐ.பி.எஸ்., சென்னை தெற்கு கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.