90-களில் தொடங்கி இன்று வரை காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்தவர் டாக்டர்.ஏ.வி.தாமோதரன் என்கிற தாமு . தனது நகைச்சுவை நடிப்பு மற்றும் மிமிக்கிரி ஆகியவற்றால் தனக்கென்று ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்தவர் நடிகர் தாமு. நடிகர் சார்லி மற்றும் ராமுவின் நகைச்சுவை காம்போ 80-களில் பிரபலம் , கே.பாலச்சந்தரின் மாணவன் என்ற பெருமை இவருக்கு உண்டு. சினிமா மட்டும் அல்லாமல் இவர் படிப்பிற்காக பல நல்ல காரியங்களை செய்துள்ளார் .




இந்நிலையில் கல்வி சேவையாளர் என்கிற இடத்திற்கு தற்பொழுது அங்கீகாரம் கிடைத்துள்ளது. கல்வித்துறையில் கடந்த 10 ஆண்டுகளாக எவர் செய்த சேவையை பாராட்டி தேசிய கல்வி ஆராய்சி மய்யம் "ராஷ்டிரிய சிக்ஷா கவுரவ் புரஸ்கார் 2021" வழங்கப்பட்டு இருக்கிறது. இது தேசிய கல்வியாளருக்கான கௌரவ விருது ஆகும் . சினிமாவை நிறுத்திவிட்டு முழு நேரமாக மக்கள் மற்றும் கல்வியின் சேவைகளை தொடர்ந்து செய்துவந்தார். தாமு ஏ. பி. ஜே. அப்துல் கலாம் அவர்களிடம் மிக நெருங்கிய தொடர்பில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கல்விக்காக இவர் செய்த பங்களிப்பு பாராட்டுதலுக்குரியது என்று பலரும் நடிகர் தாமுவை பாராட்டி வருகிறார்கள் .