தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. அதிகமான நபர்கள் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் புதியதாக முதல்-அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பு பணிகளுக்கு அனைத்து தரப்பு மக்களும் தங்களால் இயன்ற நிதியுதவி அளிக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரது வேண்டுகோளை ஏற்று அரசியல் கட்சியினர், தொழிலதிபர்கள், திரைப்பிரபலங்கள் என பல தரப்பினரும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.


தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் ரூபாய் 1 கோடியை நன்கொடையாக அளித்துள்ளனர். மேலும், தங்களது கட்சி எம்.பி.க்கள். எம்.எல்.ஏ.க்களின் ஒரு மாத ஊதியத்தையும் நிவாரணமாக வழங்குவதாக அறிவித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த், அஜித், விக்ரம், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்களும் தங்களால் இயன்ற நிதியுதவியை அளித்துள்ளனர்.




ஜெயம் ரவியின் 'பூமி' படத்தில் அறிமுகம் ஆகி பின்னர் சிம்புவுடன் "ஈஸ்வரன்" படத்திலும் நடித்த நிதி அகர்வால். தமிழக அரசின் முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ .1 லட்சம் நன்கொடை அளித்துள்ளார். தொற்று காலங்களில் முதல்வரை சந்திப்பதற்கு பதிலாக நடிகை ஆன்லைன் பரிவர்த்தனை செய்ததாக கூறப்படுகிறது. 




இவரை தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்  முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ .1 லட்சம் நன்கொடை  அளித்துள்ளார் .மேலும் கொரோனா காரணமாக படப்பிடிப்புகள் வரும் மே 31 வரை தடை செய்ப்பட்டதை அடுத்து ஃபெப்சி பிரசிடெண்ட் ஆர். செல்வமணி கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் சங்கத்தில் இருக்கும் தினசரி வேலையாட்களுக்கு முடிந்த உதவியை செய்யுமாறு சக நடிகர்களிடம் கேட்டு கொண்டார். கடந்த ஆண்டு பல நடிகர் நடிகைகள் லைட்மேன்  மற்றும் பலருக்கு தங்களால் இயன்ற உதவியை செய்தார்கள். இந்த ஆண்டும் அவர்கள் உதவி செய்தால் ஊழியர்களுக்கு மிக உதவியாக இருக்கும். மேலும் அரசாங்கம் மக்களுக்கு தரும் 2000 ரூபாய் தருமாறு கோரிக்கைகளை அந்த பேட்டியில்  முன்வைத்தார். நடிகர் அஜித் 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது, அவரை தொடர்ந்து தற்பொழுது ஐஸ்வர்யா ராஜேஷ் 1 லட்சம் நிதி வழங்கியுள்ளார் . 


இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “நேற்று வரையில் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 69 கோடி நன்கொடையாக பெறப்பட்டுள்ளது. நன்கொடையாளர்களுக்கு மனமார்ந்த நன்றி. ஏற்கனவே அறிவித்தபடி நன்கொடை முழுவதும் கொரோனா தடுப்பு பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. முதற்கட்டமாக உயிர்வளி – மருந்துகளுக்காக ரூபாய் 50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது” என அவர் பதிவிட்டு இருந்தார். முதல்வர் பொது நிவாரண நிதிக்கு மேலும் பலரும் தொடர்ந்து நன்கொடை அளித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.