கழுகு படம் மூலம் பிரபலமான நடிகர் கிருஷ்ணா போதைப்பொருள் வழக்கில் சிக்கிய நிலையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் கிருஷ்ணா கைது:

போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழ் திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பிரசாத் என்கிற அதிமுக நிர்வாகி நுங்கம்பாக்கத்தில் உள்ள பாரில் பிரச்சனை செய்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் நடத்திய விசாரணையில், நடிகர் ஸ்ரீகாந்துக்காக பிரதீப் என்பவரிடம் பிரசாத் கொக்கேன் போதை மருந்தை வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது போலீசார் விசாரணையில் நடிகர்கள் கிருஷ்ணா மற்றும் ஸ்ரீ காந்திற்கு போதைப்பொருள் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்தார்.

அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் சென்னை நுங்கம்பாக்கம் போலீசில் கைது செய்து விசாரணை மேற்க்கொண்டனர். ஆனால், இந்த வழக்கில் நடிகர் கிருஷ்ணா தலைமறைவாகி இருந்தார்.

முன்னணி இயக்குனர் விஷ்ணுவர்தனின் உடன் பிறந்த சகோதரர் கிருஷ்ணா ஆவார். ஏற்கனவே, கிருஷ்ணாவை விசாரணைக்கு ஆஜராகும்படி, போலீசார் சம்மன் கொடுத்துள்ளனர். கிருஷ்ணா வீட்டில் இல்லாததால் போலீசார் அவருடைய குடும்பத்தினரிடம் சம்மனை கொடுத்துவிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்:

நடிகர் கிருஷ்ணா கேரளாவில் படப்பிடிப்பில் இருந்ததாக கூறப்பட்டது. அவரது எண்ணுக்கு தொடர்புக்கொண்ட போது அவரது அலைப்பேசியானது ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் தலைமறைவாகி இருந்த அவரை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டது.

தலைமறைவாக இருந்த நடிகர் கிருஷ்ணாவை சென்னை நுங்கம்பாக்கம் போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். கிருஷ்ணாவிடம் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்க்கொண்டு வந்த நிலையில், தற்போது அவரை கைது செய்துள்ளனர்.

அவர் அளிக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரலாம் என்றும் இன்னும் பல நடிகர்கள், இதில் சிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. விசாரணையின்போது, நடிகர் கிருஷ்ணா தனக்கு இரைப்பை அலர்ஜி இருப்பதால் போதைப் பொருள் பயன்படுத்துவதற்கு வாய்ப்பே இல்லை என்றும் இதயத்துடிப்பு வேகமாக இருப்பதால் அது தொடர்பாக சிகிச்சை எடுத்து வருவதாக கூறினார் என தகவல்கள் வெளியாகின.

தனக்கும் பிரதீப் குமாருக்கும், எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் ஸ்ரீகாந்தை மட்டுமே தனக்கு தெரியும் என்பதால் பழகி வந்தேன் என்றும் கூறியிருந்தார்.

இதையும் படிக்க: Ayali Serial: பப்புக்கு ஆட்டம் போட பாேன அயலி.. யமுனாவிடம் போட்டுக்கொடுத்த செல்லா - அயலி சீரியலில் பரபரப்பு