தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் அயலி. புதியதாக ஒளிபரப்பப்படும் இந்த சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
துப்பாக்கி முனையில் பிடித்த அயலி:
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் அயலி மற்றும் சிவாவை பார்த்ததும் வர்மா அங்கிருந்து எஸ்கேப்பாக முயற்சி செய்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, அயலி வர்மா எஸ்கேப் ஆவதை பார்த்து அவனை துப்பாக்கி முனையில் தடுக்கிறாள். வர்மா முதுகுக்கு பின்னாடி கோழை மாதிரி துப்பாக்கி வைக்கிறீங்களே முன்னாடி வாங்க என்று சொல்ல அயலி முன்னாடி வருவதற்குள் வர்மாவின் ஆட்கள் வந்து விடுகின்றனர்.
தப்பிய வர்மா:
அங்கே ஒரு துப்பாக்கி சூடு நடக்க வர்மா தப்பி செல்கிறான், ஆனாலும் அவன் இப்படியொரு எதிரியை நான் பார்த்ததே இல்ல, அவளோட முகத்தை பார்க்கணும் கட்டுமான வேலை நடந்துட்டு இருக்க பில்டிங்கிற்கு வண்டியை விடு என்று சொல்கிறான்.
அயலிக்கு மிரட்டல்:
பிறகு சிவாவும் அயலியும் அங்கே பின்தொடர்ந்து வர வர்மா சிவாவை துப்பாக்கி முனையில் பிடித்து அயலியின் முகத்தை பார்த்து மிரட்டி விட்டு செல்கிறான். அதற்குள் செல்லா அயலியின் வாட்சை எடுத்து வந்து வீட்டில் கொடுத்து, அவ பப்புக்கு டான்ஸ் ஆட போறா என்று போட்டு கொடுக்கிறாள்.
போட்டுக்கொடுத்த செல்லா:
அயலி வீட்டிற்கு வர யமுனா அவளை நிற்க வைத்து எங்க போயிட்டு வர என்று கேட்க அயலி ஸ்கூலுக்கு போயிட்டு வருவதாக சமாளிக்கிறாள். அடுத்து உன் வாட்ச் எங்கே என்று கேட்க அயலி பதில் இல்லாமல் நிற்க செல்லா அவ எப்படி சொல்லுவா? அவ வாட்ச் தான் இங்க இருக்கே என்று கொடுக்கிறாள்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய அயலி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.