சென்னை அருகே உள்ள தாம்பரம் நகராட்சி, மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரத்தை மாநகராட்சியாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.


தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூரை ஒன்றிணைத்து மாநகராட்சி உருவாக்கப்பபடும் என்றும், மேற்கண்ட பகுதிகளை சுற்றியுள்ள பேரூராட்சிகள், ஊராட்சிகளை ஒன்றிணைத்து மாநகராட்சி உருவாக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர், சிவகாசி ஆகியவை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.






 


புதிய நகராட்சிகள் அறிவிப்பு


பள்ளப்பட்டி, திட்டக்குடி, மாங்காடு, குன்றத்தூர், நந்திவரம், கூடுவாஞ்சேரி, பொன்னேரி, கூடலூர் நகராட்சிகளாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காரமடை, திருக்கோவிலூர், மானாமதுரை, சுரண்டை, களக்காடு, திருச்செந்தூர், முசிறி, இலால்குடி நகராட்சிகளாக மாற்றப்படுகின்றன. புஞ்சை புகளூர், டிஎன்பிஎல் புகளூர் ஆகிய 2 பேரூராட்சிகளையும் இணைத்து புகளூர் நகராட்சியாக அமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


 


 






முன்னதாக, ஊராட்சி மன்ற தலைவர்களின் மாத ஊதியம் ரூபாய் 1000இல் இருந்து ரூ.2000 ஆக உயத்தப்பட்டுள்ளதாக  சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்தார். இந்த ஊதிய உயர்வு மூலம் 12,000க்கும் அதிகமான ஊராட்சிகளின் தலைவர்கள் பயனடைவார்கள் என்றும் அமைச்சர் கூறினார். மேலும், 5000 மகளிர் விவசாயிகளை உள்ளடக்கிய 50 இயற்கை பண்ணைத் தொகுப்புகள் உருவாக்கப்படும் என்றும், 5,780 கிலோமீட்டர் ஊரக சாலைகள் மேம்படுத்துதல், 121 பாலங்கள் கட்டுதல் பணிக்கு ரூ.2,097 கோடியில் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.


National Monetisation Pipeline: 25 ஏர்போர்ட்... 400 ரயில்வே ஸ்டேஷன்...என்னவெல்லாம் விற்கிறார் நிதியமைச்சர் நிர்மலா?


Chennai Earthquake: சென்னையில் நில அதிர்வு: நுங்கம்பாக்கம், பூந்தமல்லி பகுதியில் உணரப்பட்டது!