OPS: ஓ.பன்னீர்செல்வம் மாநாட்டில் பட்டாக்கத்தியுடன் உலா வந்த நபர்..! நடந்தது என்ன..?

ஓ.பன்னீர்செல்வம் திருச்சியில் நடத்திய மாநாட்டில் பட்டாக்கத்தியுடன் சுற்றித்திரிந்த நபரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். 

Continues below advertisement

ஓ.பன்னீர்செல்வம் திருச்சியில் நடத்திய மாநாட்டில் பட்டாக்கத்தியுடன் சுற்றித்திரிந்த நபரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். 

Continues below advertisement

ஓ.பி.எஸ். மாநாடு:

எம்ஜிஆர் பிறந்தநாள், ஜெயலலிதா பிறந்தநாள், அதிமுகவின் 51ஆம் ஆண்டு விழா என முப்பெரும் விழா திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், ஓ.பன்னீர்செல்வத்தின் முக்கிய ஆதரவாளர்கள், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டு மேடையில் கத்தியுடன் ஏற முயன்ற நபரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த பாண்டிதுரை என்பதும், அவர் மீது கடந்த 2020-ஆம் ஆண்டு கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளம் தெரிய வந்தது. அவர் தன்னுடைய பாதுகாப்பிற்காக கத்தியை எடுத்து வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர் மீது யாரும் புகார் அளிக்காததால் அவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த மாநாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், கு.ப.கிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இரட்டை இலை சின்னத்தை காட்டியபடி நிகழ்ச்சி மேடைக்கு நடந்து வந்த ஓபிஎஸ்-க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவ படத்திற்கு ஓபிஎஸ் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பண்ருட்டி ராமச்சந்திரன் பேச்சு

மாநாட்டில் பேசிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பண்ருட்டி ராமச்சந்திரன், திருச்சியை இங்குள்ள தொண்டர்கள் அரை அடிக்கு அழுத்தி விட்டீர்கள் என்றார். 1956-ல் அறிஞர் அண்ணா மாநாடு நடத்திய போது நான் வந்தேன். இன்று 86 வயதில் இளைஞானாக நிற்கிறேன். மூன்று முறை முதல்வர் பதவி கொடுத்த போது, மூன்று முறையும் திருப்பிக் கொடுத்தவர் ஓபிஎஸ். வரங்கொடுத்தவரையே அழிக்க துடித்த கதை உண்டு. அது தான் நினைவுக்கு வருகிறது. சிறுபான்மையாக உள்ளோம் என்பதால் எளிதாக எண்ண வேண்டாம் என்று தெரிவித்தார்.

5 தீர்மானங்கள் நிறைவேற்றம்

இந்த மாநாட்டில், 1.போலி பொதுக்குழு மூலம் ஓபிஎஸ் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் இல்லை என எடுக்கப்பட்ட முடிவை நிராகரிக்கிறோம், 2.இபிஎஸ் இடம் உள்ள பொதுக்குழு கலைக்கப்பட வேண்டும், 3.நேர்மையான பொதுக் குழுவை உருவாக்க வேண்டும், 4.ஜெயலலிதா மட்டுமே நிரந்தர பொதுச்செயலாளர்

5.பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட இபிஎஸ், மற்ற பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ள மேலும் சிலர் அந்தந்த பொறுப்புகளில் இருந்து விலக வேண்டும் ஆகிய 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஓபிஎஸ் பேச்சு

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நமது இயக்கம் ஒரு சாதாரண இயக்கம் அல்ல என்றார். எவராலும் அழிக்க முடியாத அற்புத சக்தி நம் இயக்கம். வீழ்வது நாம் ஆகினும், வளர்வது நம் இயக்கமாக இருக்கட்டும் என்றார். இயக்கத்தின் தலைமை பொறுப்பிற்கு யார் வர வேண்டும் என தேர்ந்தெடுக்கும் உரிமை தொண்டர்களுக்கு மட்டுமே  உள்ள வகையில் எம்.ஜி.ஆர் உருவாக்கினார். அதை ஜெயலலிதா பின்பற்றியது வரலாறு.

அதிமுகவின் நிரந்திர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்று உண்மையான பொதுக்குழு முடிவு செய்தது. ஆனால் நம்பிக்கை துரோகிகள் இதனை மாற்ற முயற்சிக்கின்றனர். தொண்டனை தலைமைப் பதவிக்கு கொண்டு வரும்  கடமை எங்களுக்கு உள்ளது. 2 கோடியாக இருந்த கட்சியின் நிதி, இன்று 250 கோடியாக மாறியது. கட்சியின் நிதியை முறையாக செலவு செய்யாதவர்கள் மீது தண்டனை பெற்றுத் தரப்படும்

நாம் நடத்துவது தொண்டர்களின் உரிமையை மீட்கும் தர்ம யுத்தம். உங்களின் வலிமையோடு, திருச்சி மாநகரில் விதையை உருவாக்கி உள்ளோம். இது பூ பூத்து, காய் காய்த்து, மீண்டும் தொண்டர்களிடமே கொடுக்க வேண்டும். வருகின்ற காலம், தொண்டர்களின் காலமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்து உரையை நிறைவு செய்தார்.

 

Continues below advertisement