டாஸ்மாக் தொடர்பான வழக்கில் வரம்பு மீறி செயல்பபடுவதாக கூறி வழக்கை அமலாக்கத்துறை விசாரிக்க இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்.
டாஸ்மாக் சோதனை:
டாஸ்மாக் தலைமையகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனைகளுக்கு எதிரான மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்ததை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த மனுவை இந்திய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி ஏ.ஜி.மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
தலைமை நீதிபதி கேள்வி:
"உங்கள் அமலாக்கத்துறை அனைத்து வரம்புகளையும் மீறுகிறது. உங்கள் அரசு நிறுவனத்தை எப்படி விசாரித்து சோதனை செய்ய முடியும்?" என்று தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அமலாக்கத்துறை சார்பில் அஜரான வழக்கறிஞர் ராஜுவிடம் கேட்டார். "ED அனைத்து வரம்புகளையும் மீறுகிறது. நீங்கள் நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பை முற்றிலுமாக மீறுகிறீர்கள்" என்று தலைமை நீதிபதி கவாய் கடுமையாக கடிந்து கொண்டர்.
வாதம்:
இந்த மேல்முறையீட்டு வழக்கில் ஆஜரான வழக்கறிஞர்களுள் ஒருவரான கபில் சிபல் டாஸ்மாக் ஊழியர்கள் மீது முறைகேடு குற்றச்சாட்டுகள் தொடர்பாக மாநில அரசு 41 எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது. இருப்பினும், அமலாக்கத் துறையினர் டாஸ்மாக் தலைமையகத்தில் சோதனை நடத்தி, நிர்வாக இயக்குநரைக் காவலில் எடுத்து விசாரித்துள்ளனர் என்று வாதிட்டார்.
டாஸ்மாக் அதிகாரிகளின் தனியுரிமையை மீறி, அவர்களின் தொலைபேசிகளின் குளோனிங் செய்து அமலாக்கப் பிரிவு எடுத்துள்ளதாக, தமிழக அரசின் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி வாதிட்டார்.
அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான ஏஎஸ்ஜி ராஜு இது ரூ.1000 கோடி மோசடி வழக்கு என்று கூறினார். இருப்பினும், தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், முன்னறிவிக்கப்பட்ட குற்றம் என்ன என்று கேட்டார், மேலும் அமலாக்கத்துறை அனைத்து வரம்புகளையும் மீறுவதாகக் கூறி கடுமையாக கடிந்துக்கொண்டார்.
சென்னையிலுள்ள டாஸ்மாக் தலைமையகத்தில் சோதனைகள் நடத்தும்போது, அமலாக்கத்துறை ஊழியர்களையும் அதிகாரிகளையும் தொந்தரவு செய்ததாக டாஸ்மாக் கூறிய குற்றச்சாட்டுகளையும் உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் நிராகரித்தது . சாட்சியங்கள் அழிக்கப்படுவதைத் தடுக்க, இந்த மாதிரியான திடீர் சோதனைகளின் போது ஊழியர்களை தடுத்து வைப்பது நடைமுறை சார்ந்த விஷயம் என்று நீதிபதிகள் அமர்வு கூறியது.
இடைக்காலத்தடை:
அனைத்துவாதங்களையும் கேட்ட நீதிபதிகள் டாஸ்மாக் வழக்கில் அமலாக்க இயக்குநரகத்தின் விசாரணை மற்றும் சோதனைக்கு தடை விதித்து உத்தவிட்டனர்.