பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உச்சநீதிமன்ற நீதிபதிகள் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்கள். தண்டனையை நிறுத்தி வைத்த பிறகும், பதவி பிரமாணம் செய்து வைக்க மாட்டேன் என எதன் அடிப்படையில் ஆளுநர் கூறுகிறார் என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.


நாளைக்குள் ஆளுநர் ஆர்.என்.ரவி முடிவு எடுக்காவிட்டால், உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 






பொன்முடியை அமைச்சராக்க தமிழ்நாடு அரசு சார்பாக பரிந்துரைத்த போதிலும், ஆளுநர் பதவி பிரமாணம் செய்து மறுப்பு தெரிவித்திருந்தார். இதையடுத்து, தமிழ்நாடு சார்பாக ஆளுநர் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கானது, இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. 


இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், பொன்முடியை அமைச்சராக பதவி பிராமாணம் செய்ய மறுப்பதற்கு ஆளுநருக்கு அதிகாரம் அளித்தது யார் என கேள்வி எழுப்பினர். பொன்முடியை அமைச்சராக்க பதவி பிரமாணம் செய்து வைக்க கூறினால், அதை எப்படி அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று ஆளுநர் எப்படி கூற முடியும். அரசியல் சாசனத்தை ஆளுநர் பின்பற்றவில்லை என்றால் மாநில அரசு என்ன செய்ய முடியும். 


பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது. அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்த பிறகும், பதவி பிரமாணம் செய்து வைக்க மாட்டேன் என கூறுவதை ஏற்க முடியாது. ஆளுநரின் செயல்பாடுகள் அரசியல் சாசனத்துக்கு எதிராக  உள்ளது. நாங்கள் கண்களை மூடவில்லை.






நாளைக்குள் முடிவுகளை எடுக்காவிட்டால், தகுந்த நடவடிக்கை நேரிடும் என்று உச்சநீதிமன்றம் கடுமையான கண்டனங்களை பதிவு செய்தது.


Also Read: Power Pages-4: இந்தியாவில் தேர்தலை நடத்த முடியாது என்ற உலக நாடுகள்.. திருவிழா போல் நடத்திய நேருவின் கதை தெரியுமா!