தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அதன்படி இன்று காலைமுதல் லேசான வெயிலுடன் இருந்த சென்னையில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. சென்னையின் புறநகர்ப்பகுதியிலும் லேசான முதல் மிதமான மழை பெய்து வருகிறது. அதன்படி சென்னையின் கேகே நகர், அசோக் நகர், வடபழனி, போரூர், அம்பத்தூர், திருமுல்லைவாயில் உள்ளிட்ட பகுதியில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் சில பகுதிகளில் வானம் மேகம் மூட்டத்துடன் காணப்படுகிறது. 


கன மழை பெறும் மாவட்டங்கள்:


இந்நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.