தமிழ்நாடு ஸ்டார்ட் அப் மற்றும் புதுமை திட்டத்தின் கீழ், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உதவி தொகையை வழங்குவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு தொடக்க கால ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான மானிய நிதியிலிருந்து உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.


இத்திட்டத்தின் கீழ், தொடக்க கால ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் உதவி தொகை வழங்கப்படுகிறது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தொடக்க காலத்தில் தேவைப்படும் நிதியை அளிக்கும் நோக்கில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.


புதுமையான கண்டுபிடிப்புகளை அடிப்படையாக கொண்டு இயங்கும் நிறுவனங்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.


புதுமையான உபகரணங்களை மேம்படுத்தும் நிறுவனங்கள் அல்லது அதிக வேலைவாய்ப்பை உருவாக்க சாத்தியமுள்ள நிறுவனங்கள், சமூகத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நிறுவனங்கள், அதிக வளத்தை உருவாக்கும் நிறுவனங்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.






www.startuptn.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிங்கள் மற்றும் உதவி தொகை பற்றிய பிற விவரங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.


கரோனா காலத்தில், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பெரும் பாதிப்பை சந்தித்தன. வேலைவாய்ப்பின்மை உச்சம் தொட்டுள்ள நிலையில், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஆதரவாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகின்றன.


குறிப்பாக, ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு அளிக்க வேண்டிய முக்கித்துவம் குறித்து பிரதமர் மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால், அமெரிக்க மத்திய வங்கி கடந்த சுமார் 30 ஆண்டுகளில் இல்லாத அளவு வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது.


கடன் வாங்குவதற்கான வட்டி வகிதம் 0.75 (முக்கால்) விழுக்காட்டுப் புள்ளிகள் கூடியுள்ளன. அதிகரிக்கும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் காரணமாக, உலகம் முழுவதும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பெரும் பாதிப்பை சந்திக்க உள்ளன.


இச்சூழலில், தமிழ்நாடு அரசின் திட்டம், தொடக்க கால ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு பெரும் உதவியாக அமைந்துள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண