தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர், விவேக். சமீபகாலங்களாக குணச்சித்திர வேடங்களில் மட்டும் குறைவான படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், நடிகர் விவேக்கிற்கு இன்று அதிகாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்ட காரணத்தால், அவர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். இதையடுத்து, அவர் உடல்நலம் பெற வேண்டும் என்று பல்வேறு கட்சித் தலைவர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளனர்.

சமூக சீர்திருத்தக் கருத்துகளுடன் கூடிய நகைச்சுவையால் மக்களை மகிழ்விக்கும் 'சின்னக் கலைவாணர்' @Actor_Vivek அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை அறிந்து வருத்தமுற்றேன்.

அவர் விரைவில் முழுமையான நலன் பெற்று தனது கலைச் சேவையையும், சூழலியல் பணிகளையும் தொடர வேண்டும்.
— M.K.Stalin (@mkstalin) April 16, 2021

இந்த நிலையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், சமூக சீர்த்திருத்த கருத்துக்களுடன் கூடிய நகைச்சுவையால் மக்களை மகிழ்விக்கும் `சின்னக் கலைவாணர்’ விவேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை அறிந்து வருத்தமுற்றேன். அவர் விரைவில் முழுமையான நலன் பெற்று தனது கலைச்சேவையையும், சூழலியல் பணிகளையும் தொடர வேண்டும்.” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.