கடந்த பிப்ரவரி மாதம் 23- ஆம் தேதி ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 மீனவர்கள் உட்பட இந்திய மீனவர்கள் 16 பேரையும் அவர்களது படகுகளையும் மீட்க வெளியுறவுத் துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், தமிழ்நாட்டின் தேங்காய்பட்டினம் மின்பீடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 16 இந்திய மீனவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 மீனவர்கள், கேரளாவைச் சேர்ந்த 7 மீனவர்கள் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மீனவர்கள் 2023 அன்று பதிவு எண்.IND-TN-15-MM-3733-ல் 'புனித மேரி" என்ற பெயர் கொண்ட விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்றதாகவும், நம் மீனவர்கள் 25.02.28,27 அன்று ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் டியாகோ கார்சியா அதிகாரிகளால் விசைப்படகுடன் கைது செய்யப்பட்டனர் என்பதையும் குறிப்பிட்டு கடிதம் எழுதியுள்ளார்.
மீனவர்களுக்கு இன்னல்கள்:
இப்பகுதி மீனவர்கள், மீன்பிடி தொழிலை மட்டுமே தங்கள் வாழ்வாதாரமாக நம்பியுள்ள நிலையில் இந்த கைது சம்பவம் அவர்களின் குடும்பங்களுக்கு மிகுந்த இன்னல்களை ஏற்படுத்துமென்று என்று முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இந்திய வெளியுறவு அமைச்சகம் வழிமுறைகள் மூலமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இந்த விசயத்தை எடுத்துச் சென்று கைது செய்யப்பட்டக் இந்திய மீளவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகினையும் விடுவித்திட வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் வாசிக்க.
A Rasa: வட மாநிலங்களுக்கும் 2024ல் விடியல் பிறக்கும் - முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா