ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிவசுப்பிரமணி என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.


 




கடந்த 2021ஆம் ஆண்டு கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த மலைக்கோவிலூரில் வசித்து வரும் 10 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் குடகனாற்று பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த சிவசுப்பிரமணி என்பவர் சிறுமியின் துப்பட்டாவில் கையை கட்டிப்போட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.


 


 




 


இதையடுத்து கைது செய்யப்பட்ட சிவசுப்பிரமணியை அரவக்குறிச்சி போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில், இன்று விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டது.


 




இதில், குற்றவாளி சிவசுப்பிரமணிக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி நசீமா பானு அதிரடி தீர்ப்பு வழங்கினார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்









பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண