புதுச்சேரி: சரித்திரம் மறைக்கப்படாது என்பதற்கு அமித்ஷா கூறிய கருத்தை சரித்திரத்தை மறைப்பதற்காக ஸ்டாலின் ஏதோ கூறி வருகிறார் என ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.


 ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி:-


தமிழகத்தை சேர்ந்தவர் பிரதமராக வருவதை தடுத்தது திமுக தான் என்பதை உள்துறை அமைச்சர் தெளிவாக கூறியுள்ளார். அவர் சொன்னது உண்மை, அதை மறைக்கமுடியாது. தமிழர்கள் பிரதமராக வருவதை தடுத்தார்கள் மறுத்தார்கள் மட்டும், என்பது மட்டுமல்ல தமிழரான அப்துல்கலாம் மறுபடியும் குடியரசு தலைவராக வருவதை திமுகவும், காங்கிரஸ் தடுத்தனர் என்பதை சரித்திரம் மறுக்கப்படாது. சரித்திரம் மறைக்கப்படாது என்பதற்கு அமித்ஷா கூறிய கருத்தை சரித்திரத்தை மறைப்பதற்காக ஸ்டாலின் ஏதோ கூறி வருகிறார்.


மோடி அளவிற்கு தமிழை கையாண்டவர்கள் யாரும் இல்லை. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தமிழ் அழிக்கப்படுவதாக கூறுவது தவறான கருத்து. மாணவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு சிபிஎஸ்பி பாடத்திட்டம். புதுச்சேரியில் எந்த ஒரு நல்லது தொடங்கப்பட்டாலும் என்னுடைய ஒத்துழைப்பும் இருக்கும். மருத்துவ கல்லூரி அனுமதி கிடைத்தற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என கூறினார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண