Rajesh Das: பாலியல் வழக்கில் குற்றவாளியான முன்னாள் டி.ஜி.பி..! வழக்கு கடந்து வந்த பாதை என்ன..? ஓர் அலசல்

பாலியல் வழக்கில் முன்னாள் டிஜிபி ராஜேஸ் தாஸிற்கு(Rajesh Das) 3 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அந்த வழக்கு கடந்து வந்த பாதையை இங்கு அறியலாம்.

Continues below advertisement

விழுப்புரம்: பெண் எஸ்.பி.க்கு  அதிகாரிக்கு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் விழுப்புரம் குற்றவியல் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

Continues below advertisement

முன்னாள் டி.ஜி.பி.

தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந் தேதி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கும் பணியில் அப்போதைய சட்டம்-ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி ராஜேஸ் தாஸ் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது  பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில் பெண் எஸ் பியிடம் முன்னாள் சிறப்பு டிஜிபி காரில் அழைத்து கொண்டு சென்றபோது பெண் எஸ் பியிடம் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட  பெண் எஸ் பி தன்னிடம் அத்துமீறிய சிறப்பு டி.ஜி.பி. மீது  ஒழுங்கு நடவடிக்கை எடுத்து சட்டப்பூர்வநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  ஐ.பி.எஸ். அதிகாரி, தமிழக அரசின் உள்துறை செயலாளர் மற்றும் அப்போதைய போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி ஆகியோரிடம் புகார் அளித்தார்.

பாலியல் வழக்கு:

இந்த புகாரின்பேரில் சிறப்பு டி.ஜி.பி. பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.இந்த புகார் தொடர்பாக சிறப்பு டி.ஜி.பி. மற்றும் அவரது உத்தரவின்படி பெண் ஐ.பி.எஸ். அதிகாரியை மிரட்டி கார் சாவியை பறித்த செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ் பி  ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தன.

இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகளாக சேர்க்கப்பட்ட 68 சாட்சிகளின் விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் 13-ந் தேதியன்று நிறைவடைந்ததால் இவ்வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியது. அதுபோல் இவ்வழக்கில் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரசு தரப்பு சாட்சிகள் அளித்துள்ள சாட்சியங்கள் குறித்தும், அந்த குற்றச்சாட்டுகள் அரசு தரப்பில் எந்த வகையில் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்தும் அரசு தரப்பின் வாதம் கடந்த வாரம் முடிவடைந்தது. 

கடந்து வந்த பாதை:

அதுபோல் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ் பி  தரப்பு வழக்கறிஞர்கள்  வாதங்கள் முடிந்த நிலையில் அதன் விவரங்களை இரு தரப்பு வழக்கறிஞர்களும் எழுத்துப்பூர்வமாக சமர்பிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இவ்வழக்கில் அரசு தரப்பு வழகறிஞர் வைத்தியநாதன், ரவிச்சந்திரன் ஆகியோர் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை 61 பக்கங்கள் கொண்ட வாதுரையாக நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் எழுத்துப்பூர்வமாக கடந்த 12 ஆம் தேதி தாக்கல் செய்தனர். அதன் பிறகு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பில் வழக்கறிஞர் ரவீந்திரனும், செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்பி தரப்பில் வழக்கறிஞர் ஹேமராஜனும் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட வாதங்களை தாக்கல் செய்தனர்.

இதனையடுத்து இவ்வழக்கை விசாரித்த தலைமை குற்றவியல் நீதிபதி புஷ்பராணி, வருகிற 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி இவ்வழக்கில் தீர்ப்பு இன்று வழங்கப்படுகிறது. கடந்த 2 வருடமாக மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் நடந்து வந்த இவ்வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளது.

Continues below advertisement