பிரதம மந்திரி மித்ரா பூங்காவை அதீத தொழில்நுட்பத்துடன் நிறுவ கரூர் ஜவுளி உற்பத்தி நிறுவனங்களின் ஆய்வுக்கு உதவியாக இருக்கும் என்று மத்திய ஜவுளித்துறை மேம்பாட்டு ஆணையர் கரூரில் பேட்டியளித்தார்.


 




இந்திய ஜவுளி அமைச்சகத்தின் வர்த்தக ஆலோசகர், கைத்தறி மற்றும் கைவினை பொருட்கள் மேம்பாட்டு ஆணையர் ஸ்ரீமதி சுப்ரா மற்றும் கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் மேம்பாட்டு கூடுதல் ஆணையர் ஸ்ரீ சந்தோஷ் குமார் சிங் ஆகியோர் கரூர் மாவட்டம், புத்தாம்பூர் பகுதியில் அமைந்துள்ள கரூர் ஜவுளி பூங்காவில் உள்ள ஜவுளி உற்பத்தி நிறுவனங்களை ஆய்வு செய்தனர். அப்போது கரூர் ஜவுளி பூங்கா தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து மற்றும் கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.


தொடர்ந்து கரூர் ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ஜீரோ டிஸ்சார்ஜ் முறையில் செயல்பட்டு வரும் சலவை ஆலை ஆகியவற்றை பார்வையிடுகின்றனர். அதனை தொடர்ந்து கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்க கட்டிட அரங்கில் நடைபெறும் கூட்டத்தில் இந்தியாவில் ஜவுளித்துறைக்கு உள்ள வாய்ப்புகள் பற்றியும், ஜவுளி துறையை மேம்படுத்துவதற்காக மத்திய அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றியும் எடுத்துரைத்து, ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. 




கரூர் ஜவுளி உற்பத்தி நிறுவனங்களின் தயாரிப்புகள் மற்றும் இயந்திரங்கள் குறித்து ஆய்வு செய்த ஆணையர் ஸ்ரீமதி சுப்ரா கூறுகையில், 


 




பிரதம மந்திரி மித்ரா பூங்கா ஏற்படுத்தும் போது செயல்படுத்தப்பட வேண்டிய கட்டமைப்புகளுக்கு என்ன மாதிரியான இயந்திரங்கள் கொண்டு வரலாம் என்பது பற்றி இந்த ஆய்வின் மூலம் தெளிவு கிடைக்கும். மேலும், அதீத தொழில்நுட்ப வசதிகளுடன் இயந்திரங்களை கொண்டு வர முடியும். இந்தியாவில் வேளாண்மைக்கு அடுத்ததாக அதிக தொழிலாளர்களைக் கொண்டுள்ள ஜவுளி துறையை மேம்படுத்த இந்த ஆய்வு உதவியாக இருக்கும் என்று தெரிவித்தார்.