அதிமுக-வில் உட்கட்சி பூசல் உள்ள நிலையில், கோவையில் நடந்த அதிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி பேசினார். அப்போது, அவர் பேசியதாவது, 

Continues below advertisement

நடவடிக்கை யார் எடுப்பது?

நாங்கள் திமுக எதிர்ப்பில் உறுதியாக உள்ளோம். திமுக எதிர்ப்பின் அடிப்படையில் தவெக. எங்கள் மீது நடவடிக்கை என்றால் திமுக-வுடன் போலாம் என்றவர்கள் மீது யார் நடவடிக்கை எடுப்பது? நாங்கள் நியாயமாக உள்ளோம். இன்று எங்களைப் பொறுத்தவரை பொள்ளாச்சி ஜெயராமன் பற்றியோ, பொள்ளாச்சி ஜெயராமன் மகன் மீதோ எங்கள் உடன் இருப்பவர்கள் எந்த பதிவும் போட வேண்டாம். 

தேவையில்லாத வேலை:

பொள்ளாச்சி தொடர்புடையவர்கள் திமுக பேசினார்கள். அவர் ( பொள்ளாச்சி ஜெயராமன்) வயது முதிர்வு இல்லாமல் தேவையில்லாமல் செய்து கொண்டிருக்கிறார். எங்க எப்படி இருக்கிறதோ, அதற்கு ஏற்றாற்போல ஒட்டிக்கொள்வார். அதை நிறுத்துங்கள் முதலில், எங்களுக்குத் தெரியும். நீங்கள் மந்திரியாக இருக்கும்போது என்னென்ன செய்தீர்கள்? எத்தனை பேரை வளர்த்தீர்கள்? என்று எங்களுக்குத் தெரியாதா?

Continues below advertisement

எங்களுக்கும் பொதுச்செயலாளருக்கும் ஆரோக்கியமான காேரிக்கை வைத்துள்ளோம். இன்றும் சொல்கிறோம் எடப்பாடியாரை பொதுச்செயலாளரை ஆக்குவதற்கு உறுதுணையாக இருந்த சிவி சண்முகம், தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், பாலகிருஷ்ண ரெட்டி உள்பட நிறைய உள்ளனர். அனைவரும் உங்களுக்கு உறுதுணையாக இருந்தவர்கள்.

கோரிக்கை:

நாங்கள் வைத்த கோரிக்கை பொதுக்குழு  கூட்ட வேண்டும். கமிட்டி போட வேண்டும். நான் 21 வருடம் மாவட்டச் செயலாளராக இருந்துவிட்டேன். எனக்கு பதவி போனாலும் பரவாயில்லை. மற்ற மாவட்டச் செயலாளர்கள் எனக்கு பிரச்சினை இல்லை. அடுத்த தலைமுறையினர் வர வேண்டும். மாவட்டச் செயலாளர், மாநில பதவி, அமைச்சர் பதவி அம்மா கொடுத்தார்கள்.

இந்த கட்சி கொடுத்தது. இந்த கட்சி நன்றாக இருக்க வேண்டும். அதிமுக நன்றாக இருக்க வேண்டும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். இன்று ஆளுங்கட்சியாக வந்திருக்க வேண்டும். ஏன் வர முடியவில்லை? அதற்கு நாம் ஆரோக்கியமாக கலந்தாலோசிக்க வேண்டும். தலைமையில் ஆலோசனை நடத்தினால் மட்டுமே வர முடியும். 

இவ்வாறு அவர் பேசினார்

தொடரும் அதிருப்தி:

சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தவெக ஆட்சியமைய அதிமுக ஆதரவு அளிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி ஆகியோர் உறுதியாக இருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி அதற்கு ஒத்துழைக்க மறுத்ததாக சிவி சண்முகம் குற்றம் சாட்டியிருந்தார். 

அந்த விவகாரத்திற்கு பிறகு அதிமுக-வில் பயங்கர பூகம்பம் வெடித்தது. மீண்டும் எடப்பாடி பழனிசாமியுடன் இணக்கமாக இவர்கள் செயல்பட்டாலும் அவர்களின் மாவட்டச் செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி பறித்தார். தனக்கு எதிராக செயல்பட்டவர்கள் மீது தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அதிருப்தியிலே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.