அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், அக்கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அவர் வீட்டிற்கு வந்துக்கொண்டிருக்கின்றனர்.


கவுண்டம்பாளையம் எம். எல். ஏ பி.ஆர்.ஜி அருண்குமார், சூலூர் எம் எல். ஏ. கந்தசாமி, முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் வேலுமணி வீட்டின் முன்பு முகாமிட்டுள்ளனர்.


மேலும் படிக்க: SP Velumani DVAC Raid: 810 கோடிப்பே... எஸ்.பி வேலுமணி மீதான புகார்கள்.. வெளியான முழு விவரம்..!


மேலும், ரெய்டை முன்னிட்டு வேலுமணி வீட்டில் அதிமுகவினர் குவிந்து வரும் நிலையில், அவர்களுக்கு காலை உணவு, ஆட்டோவில் கொண்டு வந்து விநோயகம் செய்து வருகின்றனர்.


அதிமுக தொண்டர்கள் வேலுமணி வீட்டின் முன்பு வருவதற்கு காவல் துறையினர் அனுமதி மறுத்ததால் வாக்குவாதம் செய்து வருகின்றனர். காவல்துறையினருக்கு எதிராக அதிமுக தொண்டர்கள் கண்டன முழக்கம் செய்து வருகின்றனர்.



அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று அதிகாலை முதல் மீண்டும் சோதனை நடத்தி வருகிறது. கோவை மைல்கல் பகுதியில் உள்ள வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்துகின்றனர். 


எஸ்.பி.வேலுமணி வீடு உள்ளிட்ட 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். வேலுமணியின் உதவியாளர் சந்தோஷின் வீடு உள்ளிட்ட கோவை மாவட்டத்தில் 41 இடங்களிலும், கோவை, சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் வேலுமணி தொடர்புடைய நபர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.


மேலும் படிக்க: watch video: எகிறி குதித்து ஓடிய 2 பேர்? அதிகாரிகள் கேள்வியால் ஆக்ரோஷமான தொண்டர்கள்! சமரசம் பேசிய வேலுமணி


மேலும், ரூ.58.23 கோடிக்கு கூடுதலாகவும், வருமானத்தை விட  3,928% கூடுதலாகவும்  சொத்து சேர்த்ததாக எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.


முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் எப்.ஐ.ஆர். வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் மொத்தம் 13 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் ஏ-1 ஆக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, இரண்டாவது குற்றவாளியாக அவரது சகோதரர் அன்பரசன், அதற்கு அடுத்து அன்பரசன் மனைவி ஹேமலதா, பின்னர், சந்திரசேகர், சந்திரபிரகாஷ் என குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண