தெற்கு ரயில்வே ஆண்டுதோறும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் எக்ஸ்பிரஸ் ரயில்கள், பயணிகள் ரயிலுக்கான கால அட்டவணை வெளியிடப்படும். அந்த அட்டவணையில் புதிய ரயில்கள் இயக்கம், கூடுதல் ரயில் நிறுத்தங்கள், ரயில் இயங்கும் நேரம் மற்றும் ரயில் இயக்கக்கூடிய வேகம் அதிகரிப்பு , மக்கள் அதிகமாக பயணிக்கும் பகுதிகளுக்கு கூடுதல் ரயில் இயக்குவது, புதிய நிறுத்தங்கள் உருவாக்குவது உள்ளிட்ட அனைத்தும் அந்த அட்டவணையில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டிருக்கும்.
தமிழ்நாட்டில் இரயில்வே துறையை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு:
தமிழகத்தில் ரயில்வே மேம்பாட்டுக்காக 2009-14-ம் ஆண்டில் ரூ.879 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது, கடந்த பிப்ரவரி மாதம் பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,331 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது 2009-14-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 7 மடங்கு உயர்வாகும்.
தமிழக ரயில்வேயில் மின்மயமாக்கல் பணி 98 சதவீதம் நிறைவடைந்துள்ளது. குறிப்பாக அம்ரித் நிலையம் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 77 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன. ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு திட்டத்தின்கீழ், தமிழகத்தில் உள்ள ரயில்நிலையங்களில் 213 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கேரளம், தமிழகத்தில் உள்ள துறைமுகங்களை இணைக்கும் வகையில், 2,100 கி.மீ. தொலைவுக்கு ரயில் தண்டவாளம் மேம்படுத்தப்படும்.
அம்ரித் பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, 2 அம்ரித் பாரத் ரயில்கள் விடப்பட்டுள்ளன. மேலும், அதிக வந்தே பாரத் ரயில்கள் வரும் ஆண்டுகளில் இயக்கப்பட உள்ளது. தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில், வந்தே மெட்ரோ ரயில் ஆகியவை சில மாதங்களில் வர உள்ளது என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
மேலும், சென்னையில் 4-வது ரயில் முனையமாக வில்லிவாக்கம் ரயில் நிலையத்தை உருவாக்க ஆய்வு மேற்கொண்டு இருக்கிறோம். 4 மாதங்களில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதுதவிர, கிளாம்பாக்கம் ரயில் நிலையம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. தெற்கு ரயில்வேயில் புதிய பாதை, அகலப் பாதை, இரட்டை பாதை உள்பட பல்வேறு பணிகளுக்கு ரூ.12,173 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
புதிய இரயில்வே அட்டவணை அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 1-ந் தேதி வெளியிடப்படும்
இரயில்வேயில் ஆண்டுதோறும் ஜூலை அல்லது ஆகஸ்டு மாதம் எக்ஸ்பிரஸ் இரயில்கள், பயணிகள் இரயிலுக்கான கால அட்டவணை வெளியிடப்படும். இந்த அட்டவணையில் புதிய இரயில்களின் இயக்கம், கூடுதல் இரயில் நிறுத்தம், இரயில்கள் இயங்கும் நேரம் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெறும்.
இந்த நிலையில், புதிய இரயில்வே அட்டவணை அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 1-ந் தேதி வெளியிடப்படும் என இரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளது. சில நிர்வாக காரணங்களுக்காக நீட்டிக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பு அனைத்து பொது மேலாளர்களுக்கும் சுற்றரிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது. எனவே டிசம்பர் 31-ந் தேதி வரை பழைய இரயில்வே அட்டவணை பின்பற்றப்படும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதே போல, புதிதாக வர இருக்கிற அட்டவணைக்கு தென்மாவட்ட மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி, நெல்லை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் இரயில்கள் கடும் கூட்ட நெரிசலுடன் செல்வதால் பயணிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். புதிய அட்டவணை மூலம் தென்மாவட்டங்களுக்கு கூடுதல் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.