கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு ஊரடங்கு முதல் ரயில் சேவை மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. அதன்பின்னர் நிறையே தடங்களில் செல்லும் ரயில்கள் நிறுத்தப்பட்டன. ஊரடங்கு சிறிய தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின் மீண்டும் ரயில் சேவை தொடங்க ஆரம்பித்தது. எனினும் ஒரு சில இடங்களுக்கு மட்டும் சிறப்பு ரயில் சேவைகள் அளிக்கப்பட்டு வந்தது. 


 


இந்நிலையில் ரயில்களில் போதிய பயணிகள் பயணக்காததால் சில சிறப்பு ரயில்களை ரத்து செய்து தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி ராமேஸ்வரம்- கன்னியாகுமரி இடையே இயக்கப்பட்டு வந்த 06165/66 ரயில்கள் வரும் மே 1ஆம் தேதி முதல் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 




 


அதேபோல் கோயம்புத்தூரிலிருந்து-கே.எஸ்.ஆர்.பெங்களூருவிற்கு இயக்கப்பட்டு வந்த 06153/54 ஆகிய ரயில்கள் வரும் 29ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது. மேலும் சென்னை சென்ட்ரல்- மைசூரு சதாப்தி விரைவு ரயில் (06081/82) ஆகிய ரயில்கள் வரும் 29ஆம் தேதி முதல் ரத்து செய்யப்பட உள்ளது. 




சென்னை சென்ட்ரல்-கோயம்புத்தூர் செல்லும் 06029/30 என்ற ரயில் இரு மார்கங்களிலும் வரும் 29 ஆம் தேதி முதல்  ரத்து செய்யப்பட்டுள்ளது. இவை தவிர எர்ணாகுளம்-பனஸ்வாடி, பனஸ்வாடி-கோச்சுவேளி, மைசூரு- ரேனிகுண்டா உள்ளிட்ட ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட ரயில்கள் அனைத்தும் மறு உத்தரவு வரும் வரை இயக்கப்பட்டாது என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.