மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள அக்னி பத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வட இந்திய மாநிலங்களில் ரயிலை எரித்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், தெற்கு ரயில்வே அதிகார வரம்பில் இருந்து வட இந்தியாவிற்கு செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது., 

பீகார் மற்றும் கிழக்கு உத்திரபிரதேச மாநில பகுதிகளுக்கு செல்லும் ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வேயில் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விவரம்:

இரயில் எண்  புறப்படும் இடம்- சேரும் இடம்  ரத்து செய்யப்பட்டுள்ள தேதி 
17230 SC-TVC Express- செகந்திரபாத்- திருவனந்தபுரம் விரைவு இரயில்  17.06.2022
22644 PNBE-ERS Express- பாட்னா- எர்னாகுளம் விரைவு இரயில் 17.06.2022
12295 SBC-DNR Express-  SAHIBGANJ JN (SBG) To DANAPUR (DNR)  சங்கமித்ரா விரைவு இரயில்                                      17.06.2022 (partially Cancelled பெரம்பூர்- DARBHANGA வழித்தடத்தில் )
12578 MYS-DBG Express(மைசூர் -DARBHANGA ) பாக்மதி விரைவு ரயில் 17.06.2022

மேலே குறிப்பிட்டுள்ள இரயில்கள் அனைத்தும் பீகார், உத்தர பிரதேச மாநிலங்களில் உள்ள பகுதிகளுக்கு செல்வதால் அபாயத்தை தடுக்கும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இரயில் எண் இரயில் பெயர் தேதி  வழி மாற்றம்
15630 SHTT-TBM Express 17.06.2022 KYQ-GLPT-NBQ
12507 TVC-SCL Express  14.04.2022 NBQ-GLPT-KYQ
12508 SCL-TVC Express 17.04.2022 KYQ-GLPT-NBQ