வெள்ளத்தால் சேதமடைந்த கோயில்களை சீரமைக்க இந்துசமய அறநிலையத்துறை ரூ.5 கோடி ஒதுக்கியுள்ளது. இது தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்:


 


இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் இன்று (டிசம்பர் 26) சென்னையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் , வெள்ளத்தால் சேதமடைந்த கோயில்களை சீரமைக்க ரூ.5 கோடி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


மிக்ஜாம் புயல்:


கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.  2015ம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளம் சென்னைக்கு முக்கிய பாடமாக இருந்த போதும், அந்த அனுபவத்தை கொண்டு இந்த புயல் மழையை எதிர்கொள்ள முடியவில்லை.


இதற்கு முக்கிய காரணம், ஒரே நாளில் 40 செ.மீ வரை மழை பொழிந்ததுதான். சென்னையின் ஆண்டு சராசரி மழை அளவு 100 மிமீ முதல் 1100 மி.மீதான். ஆனால் இதில் மூன்றில் ஒரு பகுதி மழை டிசம்பர் 4 ஆம் தேதி பெய்திருந்தது. இதுதான் பெரும் வெள்ளத்திற்கு காரணம்.


வெள்ளத்தில் ஏராளமான பொருட்கள் அடித்து செல்லப்பட்டன.  அதேபோல், பல்வேறு இடங்களில் வீடுகளும், கேவில்களும் சேதமடைந்தன. அதன்பின்னர், தென்மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டது. இதிலும் பெரும் சேதங்கள் ஏற்பட்டன. மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிக்கப்பட்டது.


கேயிகள் சீரமைப்பு:


இந்நிலையில், மிக்ஜாம் புயல், கனமழையால் பாதிக்கப்பட்ட கேயில்களை சீரமைக்க ரூ.5 கோடி ஒதுக்கி இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.  அதன்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் இன்று (டிசம்பர் 26) சென்னையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் , வெள்ளத்தால் சேதமடைந்த கோயில்களை சீரமைக்க ரூ.5 கோடி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


 


 


 


மேலும் படிக்க: Tsunami 19th Anniversary: 19ம் ஆண்டு சுனாமி நினைவு தினம்; சுனாமி ஸ்தூபில் மும்மத சிறப்பு பிரார்த்தனை - உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி


 


மேலும் படிக்க: Anumantharaya Perumal Temple: சுயம்பு வடிவில் தோன்றிய அனுமந்தராய பெருமாள் கோயில் எங்குள்ளது? - சிறப்புகள் என்ன?