1. சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே பொங்கல் விழாவில் பெண்கள் வெள்ளை சேலை உடுத்தி பொங்கல் வைத்தனர். பாரம்பரியமாக கொண்டாடப்படும் விழாவில் பலரும் கலந்துகொண்டனர்.

 

2. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அடுத்த மதுரை குடிநீர் திட்ட நீரேற்று நிலையம் அருகே 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் உடல் எரிந்த நிலையில் கிடந்தது. திருப்புவனம் இன்ஸ்பெக்டர் சீராளன் மற்றும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

 



3. செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் ரைபிள் பிரிவில் ராமநாதபுரம் மாவட்ட பெண் போலீசார் இருவர் முதல் பரிசு வென்றனர். தமிழக போலீஸ் சார்பில்மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கத்தில் நடந்தது.  இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து ராமேஸ்வரம் கோயில் போலீஸ் ஸ்டேஷன் ஏட்டு ஜீனிதா, ஏர்வாடி தர்ஹா கிரேடு 1 போலீஸ் ராமலெட்சுமி பங்கேற்றனர். இருவரும் முறையே 300 யார்டு மற்றும் 100 யார்டு பிரிவில் முதல் இடத்தை பிடித்தனர்.

 

 




 

4. நெல்லை மாவட்டம் பணகுடி அருகே வடலிவிலை கிராமத்தில் தமிழர்களின் பாரம்பரியக் கலைகளில் ஒன்றான இளவட்டக்கல் தூக்கும் போட்டி நேற்று நடைபெற்றது, அதில் 129 கிலோ எடை கொண்ட இளவட்ட கல்லை கடந்த 4 ஆண்டுகளாக தூக்கி வரும் தங்கராஜ் என்பவர் முதல் பரிசையும், 114 கிலோ எடைகொண்ட இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் தங்கராஜ் முதல் பரிசும், அஜய் இரண்டாவது பரிசை வென்றனர், மேலும் உரலை ஒரு கையில் அதிக நேரம் நிறுத்தும் போட்டியில் அஜய் முதல் பரிசும், பாலகிருஷ்ணன் 2 ஆம் பரிசும் பெற்றனர், பெண்கள் பிரிவில் ராஜேஷ்குமாரின் 65 கிலோ இளவட்ட கல்லை 10 முறை தூக்கி முதல் பரிசும்,  பத்மா என்பவர் 4 முறை தூக்கி இரண்டாவது பரிசும் பெற்றார்.


 

5. கடனாக வாங்கிய ரூ.3 லட்சத்துக்கு டம்மி நோட்டு கட்டுகள் வழங்கி ஏமாற்றிய 5 பேர் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கைது செய்யப்பட்டனர்.

 

6. ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்கு தோட்டத்தில் பதிக்கி வைத்திருந்த ரூ.30 லட்சம் மதிப்புள்ள கடல் அட்டைகளை ராமநாதபுரம் குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.

 

7. தை-ம் 2 தேதி நடைபெற்ற பாலமேடு  ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர் பிராபகரன் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்டார்.
  

 



 

8. மதுரை உசிலம்பட்டியில் அருகே ஆண்கள் மட்டும் கலந்துகொள்ளும் ஜக்கம்மாள் கோயில் விழா நேற்று நடைபெற்றது.

 

9. உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நாளை நடைபெறுகிறது. இந்து ஞாயிறு முழு ஊரடங்கு என்பதால் நாளை நடைபெறுகிறது.

 

10. தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா வில் 182.50 ஏக்கர் அரசு புறம்போக்குநில அபகரிப்பு விவகாரத்தில் அ.தி.மு.க., ஒன்றிய செயலாளரின் உறவினர் அரசு நிலத்தை தனது மனைவிக்கு தான செட் டில்மென்ட் வழங்கியது சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.