சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையினையும் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கான "சமூக நல்லிணக்க ஊராட்சி விருது.
சமூக நல்லிணக்க ஊராட்சி விருது
இந்த விருது பெறுவதற்கு, வருகின்ற ஜூலை 31 ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றம் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தினை நேரில் சமர்ப்பித்திடல் வேண்டும்- என சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தகவல் தெரிவித்துள்ளார்.
தகுதி வாய்ந்த 10 ஊராட்சிகளுக்கு சமூக நல்லிணக்க ஊராட்சி விருது மற்றும் 1கோடி
சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையினையும் கடைபிடிக்கும் ஊராட்சிகளை ஊக்குவித்து கவுரவிக்கும் வகையில், தகுதி வாய்ந்த 10 ஊராட்சிகளுக்கு சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுடன் தலா ரூ.1 கோடி வழங்கப்படும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இணையதள முகவரியில் அப்ளே செய்வது எப்படி
அதனடிப்படையில், 2025-ம் ஆண்டிற்கான சமூக நல்லிணக்க ஊராட்சி விருது பெற விரும்புவோர், விண்ணப்பப்படிவத்தை http://tinyurl.com/panchayat award அல்லது http://cms.tn.gov.in/cms_ migrated/document/forms/ samooga_Nallinakka_Ooratchi_Award_Application. pdf என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்படிவத்தையும் கொடுக்கலாம்
பதிவிறக்கம் செய்த பி.டி.எஃப் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றம் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நேரிலோ பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்படிவத்துடன் உரிய ஆவணங்களை இணைத்து வருகின்ற ஜூலை 31 ஆம் தேதிக்குள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றம் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நேரில் சமர்ப்பித்திடல் வேண்டும் என மாவட்டஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.